Published:Updated:

`அவமானம்; குற்றஉணர்வு; தங்க மோதிரம்!' -சென்னை மாணவி எடுத்த விபரீத முடிவு

வீட்டிலிருந்த மோதிரத்தைத் திருடிய அரசுப் பள்ளி மாணவி, அதை அடகு வைத்து தோழிகளுடன் ஆடம்பரமாக செலவழித்துள்ளார்.

மாணவி
மாணவி ( மாதிரி படம் )

சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, 41-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், செக்யூரிட்டியாக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி லட்சுமி, வீட்டு வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகனுக்கும் மற்ற 2 மகள்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. சண்முகத்தின் 3-வது மகள், அந்தப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார்.

மோதிரம்
மோதிரம்
மாதிரி படம்

அதே மாநகராட்சிப் பள்ளியில் சண்முகத்தின் 2-வது மகளும் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். வழக்கம்போல நேற்று அவர் பள்ளிக்குச் சென்றார். ஆனால், தன்னுடைய தங்கை ராஜலட்சுமி பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த 12-ம் வகுப்பு மாணவியான சண்முகத்தின் மகள், தன்னுடைய தங்கையைத் தேடி வீட்டுக்கு வந்தார். அப்போது அவரின் தங்கை, வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த 12-ம் வகுப்பு மாணவி, தன்னுடைய தந்தைக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவல் கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொற்கொடி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவந்தது.

தற்கொலை
தற்கொலை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சண்முகம், வீட்டில் கால் சவரன் தங்க மோதிரத்தை வைத்துள்ளார். அந்த மோதிரம், கடந்த மாதம் காணாமல் போயுள்ளது. அதனால் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் விசாரித்துள்ளார். அப்போது மோதிரத்தை அந்த மாணவி திருடி, அடகுக் கடையில் வைத்தது தெரியவந்தது. பின்னர் அந்த மோதிரத்தை சண்முகம் அடகுக் கடையிலிருந்து மீட்டுள்ளார். மோதிரத்தை எதற்காக அடகு வைத்தாய் என்று மகளிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, மாணவி அளித்த பதில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோழிகளுடன் சேர்ந்து ஆடம்பரமாக அந்தப் பணத்தை செலவழித்துவிட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதனால், சண்முகம் அவரைக் கண்டித்துள்ளார். இதனால் கடந்த 19-ம் தேதி, மாலையில் தன்னுடைய இடதுகையின் மணிக்கட்டு பகுதியை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதை வீட்டில் உள்ளவர்கள் பார்த்து, அவரைக் காப்பாற்றியுள்ளனர். அதோடு அவருக்குப் புத்திமதிகளையும் கூறி சமரசப்படுத்தியுள்ளனர். ஆனால், சண்முகத்தின் 3-வது மகள், குற்றஉணர்வால் அவமானமடைந்தார்.

மாணவி அளித்த பதில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோழிகளுடன் சேர்ந்து ஆடம்பரமாக அந்தப் பணத்தை செலவழித்துவிட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதனால், சண்முகம் அவரைக் கண்டித்துள்ளார்.
போலீஸார்

மனஉளைச்சலில் இருந்த அவர், 20-ம் தேதி காலையில் வீட்டிலிருந்து அனைவரும் வெளியில் சென்ற பிறகு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பிரேதப் பரிசோதனையை முடித்து மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.

``வீட்டில் மோதிரத்தைத் திருடிய ராஜலட்சுமி, அதை 4,000 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். அதில் தனக்கு இரண்டு டிரஸ் எடுத்துள்ளார். மீதி தொகையை நண்பர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். ராஜலட்சுமியிடம் புது டிரஸ் இருப்பதைப் பார்த்த அவரின் அப்பா, இந்தத் துணி எடுக்க உனக்கு பணம் எப்படி கிடைத்தது என்று விசாரித்தபோதுதான் மோதிரத்தை திருடியதை ராஜலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

அவமானம், குற்ற உணர்வால், 10-ம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் கொரட்டூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.