Published:Updated:

சக மாணவிகள் முன் திட்டிய ஆசிரியர்; மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி! - தஞ்சையில் சோகம்

பள்ளி மாணவி தற்கொலை

மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (31) என்பவர், அவரை சக மாணவிகள் முன் திட்டியதாகக் கூறப்படுகிறது.

சக மாணவிகள் முன் திட்டிய ஆசிரியர்; மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி! - தஞ்சையில் சோகம்

மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (31) என்பவர், அவரை சக மாணவிகள் முன் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் மனைவி சுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மோகன் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அதனால், சுந்தரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தியதுடன், பிள்ளைகளையும் கவனித்து படிக்க வைத்துவந்தார். வடசேரியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் அவரின் மகள் 11-ம் வகுப்பும், மகன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

Suicide
Suicide
Representational Image
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி அவர் பிள்ளைகள் இருவரும் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றனர். மதியம் வீட்டிற்கு சாப்பிடச் சென்ற சுந்தரியின் மகள் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவியின் தம்பியை அழைத்து விசாரித்திருக்கின்றனர். அதையடுத்து, சிறுவன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் அவர் அக்கா பள்ளி சீருடையுடன் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியில் சிறுவன் கதறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், துாக்கில் தொங்கிய மாணவியை மீட்டனர். ஆனால், அவர் இறந்துவிட்டது தெரிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். உடனே வேலைக்கு சென்றிருந்த சுந்தரிக்கும் தகவல் சொல்லி வரவழைத்தனர்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

இதுகுறித்து மாணவியின் சித்தப்பா சண்முகம் பாப்பாநாடு போலீஸில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (31) என்பவர், அவரை சக மாணவிகள் முன் திட்டியது தெரியவந்தது. அதனால், மனமுடைந்த மாணவி வீட்டுக்குச் சென்றதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அதையடுத்து, மாணவியைத் திட்டி தற்கொலைக்கு துாண்டியதாக ஆசிரியர் கணேஷை போலீஸார் கைது செய்தனர்.