Published:Updated:

``என் சாவுக்காவது நீ வரணும்..!" - பெற்றோரை ஒன்றுசேர்க்க தற்கொலை செய்துகொண்ட மாணவர்!

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

தருணுக்கு நேற்று தேர்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால், தன் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவது தருணுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

``என் சாவுக்காவது நீ வரணும்..!" - பெற்றோரை ஒன்றுசேர்க்க தற்கொலை செய்துகொண்ட மாணவர்!

தருணுக்கு நேற்று தேர்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால், தன் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவது தருணுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

"அப்பா, அம்மா பிரிஞ்சிருக்கிற நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும். அதுக்காக, நான் சாவறதை தவிர வேற வழியில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தருண் எழுதிய கடிதம்
தருண் எழுதிய கடிதம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். டிரைவராக பணியாற்றிவர், தற்போது விவசாயம் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இவர் மனைவி மேகலா. இந்தத் தம்பதிக்கு நர்மதா என்ற மகளும், தருண் என்ற மகனும் உள்ளனர். தருண் அருகில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மது அருந்தும் பழக்கமுள்ள ரவிச்சந்திரனுக்கும், அவர் மனைவி மேகலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதன்காரணமாக, கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது, மேகலா அவையம்பாளையத்தில் உள்ள அவர் பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். தருணும், தனது தாயோடு வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தருணுக்கு நேற்று தேர்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால், தன் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவது தருணுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தருண் எழுதிய கடிதம்
தருண் எழுதிய கடிதம்

இதனால், மாணவர் தருண், `எனது சாவிற்கு பிறகாவது, பெற்றோர் இணைந்து வாழவேண்டும்' என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, நேற்று முன் தினம் இரவு தன் பாட்டி வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. நேற்று காலை அவர் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, தருண் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு, கதறி அழுதனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த பேளுக்குறிச்சி காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்ட தருண் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மாணவர் தருண் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது பெற்றோருக்கு எழுதிய நான்கு பக்க கடிதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், உருக்கமாக தன் தந்தை மற்றும் தாய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தருண் எழுதிய கடிதம்
தருண் எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

அந்த கடிதத்தில், ``அப்பா, இனிமேல் வீட்டுல நீங்க சண்டை போடக்கூடாது. உங்களை குடிக்க வேண்டாம்னு சொல்லலை. அளவா குடிங்க. குடிச்சுட்டு வந்தாலும் வீட்டுல சண்டை போடாம இருக்கணும். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கமேல நான ரொம்ப பாசம் வச்சுருக்கேன். உங்களை அடிச்சதுக்கு மன்னிச்சுடுங்க. அப்பா, நான் உங்ககிட்ட எப்பவோ மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்பவும் நீங்க போதையில இருந்ததாலதான், நான் கேக்கல. உங்ககிட்ட மன்னிப்பு கேட்டாலும், நீங்க போதையில இருப்பதால் புரிஞ்சுருக்கமாட்டீங்க. அப்பா எனக்காக நீங்க மாறணும். நான் போறதே, உங்களுக்காகதான். என் இறப்பு உங்களை மாத்தும். எனக்கு நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்.

அதுக்காக, இதை விட்டா வேற வழி தெரியலப்பா. நீங்க மாறுற மாதிரி தெரியலை. அதனாலதான், இந்த முடிவை எடுத்தேன். நீங்க இங்க தாத்தா வீட்டுக்கு வரலன்னாலும் பரவாயில்லை. 'நீங்க இங்க வாங்க'னு எங்களை கூப்பிட்டிருந்தா, உங்களோட வந்திருப்போம். 'நான் இறந்தா, நீ கொல்லி வைக்க வரக்கூடாது'னு என்கிட்ட சொன்னீங்க. ஆனா, நான் உங்களை அப்படி வரக்கூடாதுனு சொல்லமாட்டேன். என் இறப்புக்கு நீங்க வாங்கப்பா. எனக்கு இறுதிசடங்கு செஞ்சு வையுங்க. அப்பா, அக்கா செல்லுக்கு நீங்க சாபம் விட்ட வீடியோவை அனுப்பி வச்சுருக்கேன். அதை கேளுங்க.

 தற்கொலை செய்துகொண்ட தருண்
தற்கொலை செய்துகொண்ட தருண்
நா.ராஜமுருகன்

ஒரு அப்பா மனசு நொந்து இப்படி சாபம் விட்டா, அந்த அப்பாவோட பையன் எப்படி நல்லா இருக்க முடியும்? குடிச்சுட்டு பேசிட்டேனு சொல்லிடாதீங்க. உசுரும், வார்த்தையும் ஒண்ணு. எல்லாரும் என்னைப் பார்க்குறப்ப, 'அவனோட அப்பா மாதிரியே இருக்கான்'னு சொல்வாங்க. அதைக் கேட்டதும், 'அப்பா போல நாம இருக்கோம்'னு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதை நினைச்சு மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுக்குவேன். நீங்க எவ்வளவுதான் குடிச்சுட்டு பேசினாலும், உங்கமேல எனக்கு பாசம் குறையாது.

நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர, இதை விட்டா எனக்கு வேற வழி தெரியலை. நீ, அம்மா, அக்கா மூணு பேரும் சேர்ந்து வாழணும். இதுதான், எனது கடைசி ஆசை. அம்மா, நான் உன்னை விட்டுட்டு போறேனு அழக்கூடாது. அம்மா, நீ தினமும் வேலைக்கு போய்ட்டு வந்துட்டு, கை, காலை கழுவும்போது, உடம்பு வலிக்குதுனு சொல்லும்போது, எனக்கு மனசு அவ்வளவு வலிக்கும். நான் வேலைக்குப் போய், உன்னை உட்கார வச்சு சோறு போடணும்னு ஆசைபடுவேன்.

தருண் எழுதிய கடிதம்
தருண் எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

இந்த கடிதத்தை அப்பாவிடம் வாசித்து காட்டுங்க. நீங்க மூணு பேரும் சேர்ந்து வாழணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அப்பா, அம்மாவை நீங்க கஷ்டப்படுத்தும்போது, உங்களுக்கு எப்படி சப்போர்ட் ஆக பேசுவேன்? உங்க மேலயும் பாசம் இருக்கு அப்பா. எனக்கு, நீங்க ரெண்டு பேரும் முக்கியம்" என்று எழுதியிருப்பது, படிப்போரின் மனதை கனமாக்கும்விதமாக இருக்கிறது.

'தருண், இப்படி அவசரப்பட்டிருக்க வேண்டாம்' என்று 'உச்' கொட்ட வைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism