Published:Updated:

திருவள்ளூர்: ப்ளஸ் டூ மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை; அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு... சாலைமறியல்!

மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை

திருவள்ளூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர்: ப்ளஸ் டூ மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை; அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு... சாலைமறியல்!

திருவள்ளூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகிலுள்ள கீழ்சேரிப் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசணம் என்பவரின் 17 வயது மகள், 12-ம் வகுப்பு படித்துவந்தார். பள்ளி விடுதியில் அந்த மாணவி தங்கியிருந்தார். வழக்கம்போல இன்று காலை அவர், பள்ளிக்குச் செல்ல தயாரானார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள், அவரின் விடுதி அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கு அவர், தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

பள்ளி
பள்ளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் சத்தம் போட்டனர். பின்னர் அந்த மாணவி தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் தகவலை விடுதிப் பொறுப்பாளர், பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த விடுதிப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மாணவியைக் கீழே இறக்கி முதலுதவி செய்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸுக்கும், மப்பேடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து மப்பேடு போலீஸார், அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாணவி உயிரிழந்த தகவல் காட்டுத் தீ போலப் பரவியது. உடனடியாக அவரின் பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகம் சரியான பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், திருத்தணியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை அவர்கள் சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் ஆர்.டி.ஓ அர்ஷத் பேகம், டி.எஸ்.பி சாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் சொந்த ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூரை நோக்கிச் செல்ல ஆயத்தமாகினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதனால் போலீஸாருக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலைமறியல்
சாலைமறியல்

இந்த நிலையில் மாணவி படித்த பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், டி.ஐ.ஜி சத்ய பிரியா, எஸ்.பி பா.சீபாஸ் கல்யாண், டி.எஸ்.பி-க்கள் மற்றும் போலீஸார் வந்து விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரனும் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் மாணவியின் மரண சம்பவத்தையடுத்து விடுதியில் தங்கிப் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோரும் அங்கு வந்தனர். யாரையும் பள்ளி விடுதிக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. அதனால் மற்ற மாணவிகளின் பெற்றோருக்கும்-உறவினர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவி மரணச் சம்பவம் திருவள்ளூரில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளி
பள்ளி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவியுடன் அவர் உறவினர் பெண்கள் சிலரும் படித்துவருகின்றனர். அவர்களும் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியில் தங்கியிருக்கின்றனர். இன்று காலை அனைவரும்தான் பள்ளிக்குச் செல்லப் புறப்பட்டிருக்கின்றனர். விடுதி அறைக்குச் செல்வதாகக் கூறிய மாணவி, தூக்கில் தொங்கியபடி கிடந்திருக்கிறார். அதனால், விடுதியில் மாணவியுடன் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விடுதி பொறுப்பாளர், மாணவியின் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மாணவியின் தோழிகள் ஆகியோரிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. பிரேத பரிசோதனை, விசாரணைக்குப் பிறகுதான் மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.