Published:Updated:

ஒரத்தநாடு: வகுப்பில் திட்டிய கணித ஆசிரியர்; மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி!

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

கடந்த சில தினங்களுக்கு முன்பு கணித ஆசிரியரான சசிக்குமார் சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

ஒரத்தநாடு: வகுப்பில் திட்டிய கணித ஆசிரியர்; மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கணித ஆசிரியரான சசிக்குமார் சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவருடைய 17 வயது மகள் ஒரத்தநாட்டிலுள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார்.

மாணவி படித்த தனியார் பள்ளி
மாணவி படித்த தனியார் பள்ளி

அந்தப் பள்ளியில் சசிக்குமார் என்பவர், கணித ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணித ஆசிரியரான சசிக்குமார் சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விவசாயப் பணிகளுக்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், அந்த மாணவி தூக்கில் பிணமாத்க தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

அந்த மாணவி, பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு வாட்ஸ்அப்பில், `பள்ளியில் கணித ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொள்கிறேன்' என மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கதறி அழும் உறவினர்
கதறி அழும் உறவினர்

மாணவி சடலமாகக் கிடப்பதை பார்த்த உறவினர்கள், ``எங்க வீட்டுச் செல்ல மவ பொணமாக கிடக்கிறாளே... வக்கீலுக்குப் படிக்க ஆசைப்பட்டவ எழுந்திரிக்காம கிடக்கிறாளே..." என மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து, மாணவியின் சித்தப்பா சிவக்குமார் என்பவர், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் குறிப்பிட்ட அந்தக் கணித ஆசிரியர்மீது புகார் அளித்தார்.

அதன்பேரில் ஆசிரியர் சசிக்குமார்மீது போலீஸார் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism