Published:Updated:

வீட்டில் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட 11-ம் வகுப்பு மாணவி - திருப்பூரில் அதிர்ச்சி

கொலை ( சித்திரிப்புப் படம் )

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட 11-ம் வகுப்பு மாணவி - திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை ( சித்திரிப்புப் படம் )

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தம்பதி சண்முகராஜ், கற்பகம். சண்முகராஜ் அங்குள்ள ஓர் கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். கற்பகம் பின்னாலடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

ஹர்த்திகா
ஹர்த்திகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தம்பதியின் ஒரே மகளான ஹர்த்திகா (17), அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல காலை பள்ளிக்குச் சென்று, மாலை வீடு திரும்பியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறிது நேரத்தில் கற்பகமும் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சமையலறையில் ஹர்த்திகா கழுத்து அறுபட்டிருந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கத்தி
கத்தி

ஆனால், செல்லும் வழியிலேயே ஹர்த்திகாவின் உயிர் பிரிந்துவிட்டது. இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் எஸ்.பி ஷசாங்க் சாய் உள்ளிட்டோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். “ஹர்த்திகாவை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியாகச் சொல்ல முடியும். அதேநேரத்தில் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ்
போலீஸ்

சமையலறையிலிருந்து, ரத்தக்கறையுடன் ஒரு கத்தியைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருகிறோம்” என்று போலீஸார் கூறியுள்ளனர்.