Published:Updated:

ஒருதலைக் காதல்; பள்ளி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர்! - குன்னூர் கொடூரம்

ஆஷிக்

மாணவியைப் பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென மாணவியைக் குத்தியிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அலறித் துடித்திருக்கிறார்.

ஒருதலைக் காதல்; பள்ளி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர்! - குன்னூர் கொடூரம்

மாணவியைப் பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென மாணவியைக் குத்தியிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அலறித் துடித்திருக்கிறார்.

Published:Updated:
ஆஷிக்

நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கம்‌போல் இன்று காலை பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவியைப் பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென மாணவியைக் குத்தியிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அலறித் துடித்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அந்த இளைஞரைக் கட்டிவைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி வளாகத்தின் அருகிலேயே மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஷிக்
ஆஷிக்

இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் காவல்துறையினர், ``குன்னூரைச் சேர்ந்த 26 வயதான ஆஷிக் என்ற இளைஞர், அந்த மாணவியைக் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்திவந்திருக்கிறார். அந்த மாணவி தவிர்த்துவந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிக், கத்தியை எடுத்துச் சென்று இன்று காலை குத்தியுள்ளார். மாணவியின் மார்பு மற்றும் வயிற்றுப்‌ பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆஷிக்கை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism