Published:Updated:

படிக்கச் சொல்லி திட்டிய பெற்றோர்? - விபரீத முடிவெடுத்த ப்ளஸ் டூ மாணவன்! - காரைக்குடியில் சோகம்

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்கச் சொல்லி திட்டிய பெற்றோர்? - விபரீத முடிவெடுத்த ப்ளஸ் டூ மாணவன்! - காரைக்குடியில் சோகம்

ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையைச் சேர்ந்தவர் சுடர்ராஜ். இவரின் 17 வயது மகன் புதுவயலிலுள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவந்தார். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு அந்த மாணவர் படிப்பில் முறையாக கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியே போனால், தன் மகனின் எதிர்காலம் வீணாகிவிடுமே என்று அஞ்சிய பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்தத் தொடர்ந்து அவரை வலியுறுத்திவந்திருக்கின்றனர். ஆனாலும், மாணவர் படிப்பில் மந்தமாகவே இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவனை அவர் பெற்றோர் திட்டியதோடு மிகக் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு, ஒருவித விரக்தியிலேயே இருந்திருக்கிறார் அவர். இதற்கிடையே, மகனை பார்த்துக்கொள்ளக் கூறி, உறவினர்களிடம் சொல்லிவிட்டு, சுடர்ராஜ் தன் மனைவியுடன் திருச்செந்தூர் அருகே குலதெய்வம் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் அன்றைய தினம் வீட்டுக்குள் சென்ற மாணவன், இரவு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்திருக்கின்றனர். கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மாணவனின் பெற்றோருக்கும் சாக்கோட்டை போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனி அறையில் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலை
தற்கொலை

இதையடுத்து, அவரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாக்கோட்டை போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

பெற்றோர் படிக்கச் சொல்லி கண்டித்த நிலையில், மாணவன் தற்கொலை செய்து உயிரை மாய்த்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``மாணவன் இறப்பதற்கு முன்பு, சுவரில் ஒரு தகவலை எழுதிவைத்துவிட்டு இறந்திருகிறார். அதில், `நான் நல்ல முறையில் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை; என்னை மன்னித்துவிடுங்கள்; என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" எனச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார். பெற்றோர் திட்டிய விரக்தியிலிருந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்