Published:Updated:

`10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை!' - தொடக்கப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கைதான ஆசிரியர்

10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

`10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை!' - தொடக்கப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கைதான ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 150 சிறுவர் - சிறுமிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கணக்கு ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார் துளசிராமன். அந்தப் பள்ளியில், 4 மற்றும் 5-ம் வகுப்பு பயின்று வரும் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு இவர் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

துளசிராமன்
துளசிராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், தங்களிடம் ஆசிரியர் நடந்துக்கொள்ளும் விதம் குறித்து பள்ளிச் சிறுமி ஒருவர் தன் பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சக சிறுமிகளின் பெற்றோர்கள் சிலருடன் பள்ளிக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, துளசிராமன் 10 நாள்கள் விடுமுறையில் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, இன்று மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளார் உதவி தலைமையாசிரியர் துளசிராமன். அதையறிந்து கிராம பிரதிநிகளுடன் சென்றிருந்த சிறுமிகளின் பெற்றோர்கள், துளசிராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே, காவல்துறையினரும், கல்வி அலுவலர்களும் அந்த தொடக்கப்பள்ளிக்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து பள்ளி சிறுமிகளிடம் விசாரித்ததில், சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் துளசிராமன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து, சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் துளசிராமனை கைது செய்த மகளிர் காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

இந்தச் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் பேசினோம். ``தகவல் கிடைத்தவுடன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டோம். மேலும், மாணவிகளுடன் பேசியபோது அது உண்மை என தெரியவந்தது. இரண்டு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், சில சிறுமிகள் பாலியல் ரீதியான சீண்டலுக்கு உள்ளானதும் தெரியவந்தது. துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமிகளை சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளோம். மேலும், சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து துளசிராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்" என்றார்.

குழந்தைகளுக்கு கல்வியும், ஒழுக்கத்தையும் பயிற்றுவிக்க வேண்டிய ஆசிரியரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism