Published:Updated:

`போக்ஸோ வழக்கால் அச்சம்?' - விபரீத முடிவெடுத்த நாமக்கல் சாமியார்

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம் ( நா.ராஜமுருகன் )

இவர் மீது திருப்பூர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை நாளை திருப்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தன்மீது பதியப்பட்ட போக்ஸோ சட்ட வழக்கின் விசாரணைக்காக பயந்த சாமியார் ஒருவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை
நா.ராஜமுருகன்

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூர் அருகே ஒரு விவசாயக் கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் காவி வேட்டி கட்டிய நிலையில் கிணற்றில் மிதப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.

`மகன் இறந்ததை ஜீரணிக்க முடியவில்லை!'- கரூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

இதை அடுத்து, கரூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணையை மேற்கொண்டனர். காவி வேட்டி அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று தலை குப்புற அங்குள்ள விவசாயக் கிணற்றில் மிதப்பதைப் பார்த்து, காவல்துறையினர் சந்தேகித்தனர். சடலத்தை மேலே எடுப்பதற்கு சிரமமாக இருந்ததால், கரூர் நகர தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்கள்.

பூர்ண சேவானந்தா உடல்
பூர்ண சேவானந்தா உடல்
நா.ராஜமுருகன்

அதைத்தொடர்ந்து ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் கிடந்த சாமியாரின் சடலத்தைக் கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர். அந்த பிரேதத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாமியார் கோலத்தில் அந்த நபர் இருந்ததால், முதலில் போலீஸாருக்கு அவர் யாரென்று தெரியவில்லை. அதனால், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

விசாரணையில், காவி வேட்டியுடன் கிணற்றில் இறந்து கிடந்த அந்த நபர், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, சிந்து நகரில் உள்ள ஆசிரமத்தில் இருந்த ராஜசேகரன் என்கிற பூர்ண சேவானந்தா (வயது 55) எனத் தெரியவந்தது. அவர் எதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள கிணற்றில் இறந்துகிடந்தார். அவரது மரணத்துக்கு காரணம் தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரனையின் முடிவில், பூர்ண சேவானந்தமா, வழக்கு ஒன்றின் விசாரணைக்கு பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்
நா.ராஜமுருகன்

பூர்ண சேவானந்தாவுக்குச் சொந்த ஊர், திருப்பூர் முருங்கபாளைத்தில் உள்ள குமார் நகர். அங்கு இவர் மீது திருப்பூர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், மனமுடைந்த பூர்ண சேவான்ந்தா, கரூர் மாவட்டத்துக்கு வந்து, சுக்காலியூர் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு