Published:Updated:

ஜூனியரை பார்ட்டிக்கு அழைத்து, பெண் உதவியுடன் ஆபாச வீடியோ... ரூ.30 லட்சம் பறித்த சீனியர் மாணவர்கள்!

சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிராவில் ஜூனியர் மாணவனிடம் ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி ரூ.30 லட்சம் பறித்த சீனியர் மாணவர்கள் மூன்று பேரில் ஒருவர் கைது.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-வது ஆண்டு படிப்பவர் ஷியாம். தானே மாவட்டம் டோம்பிவலியைச் சேர்ந்த ஷியாம் தொழிலதிபர் ஒருவரின் மகன். கடந்த ஆண்டு இதே கல்லூரியில் படிப்பை முடித்த சாகர், சுபம், ரோஹன் ஆகியோர் தங்களது கல்லூரிப் படிப்பு முடிகிறது என்பதால் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பார்ட்டி பண்ணை வீடு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்ட்டிக்கு ஷியாம் அழைக்கப்பட்டிருந்தார். பார்ட்டியில் ஷியாமுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் செய்தனர். அதன் பிறகு ஒரு பெண்ணின் துணையோடு ஷியாமை ஆபாச வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை ஷியாமிடம் காட்டி அதை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாகக் கூறி மிரட்டி சீனியர் மாணவர்கள் மூன்று பேரும் பணம் கேட்க ஆரம்பித்தனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து ஷியாம் தனது வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடிக் கொண்டு வந்து சீனியர் மாணவர்களிடம் கொடுத்திருக்கிறார்.

ஜூனியரை பார்ட்டிக்கு அழைத்து, பெண் உதவியுடன் ஆபாச வீடியோ... ரூ.30 லட்சம் பறித்த சீனியர் மாணவர்கள்!

ஆனால், அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் தொந்தரவு அதிகரித்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து ஷியாம் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து ஷியாம் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து கோலாப்பூரிலிருந்து சாகர் என்பவரை மட்டும் கைதுசெய்துள்ளனர். மற்ற இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். ஷியாம் தொழிலதிபரின் மகன் என்பதைத் தெரிந்துகொண்டு மூவரும் மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டதாக இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.