Published:Updated:

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை!

 நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சின்னத்திரை உலகில் தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை நசரத்பேட்டையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நேற்று இரவு ஹோட்டலில் தங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸாருக்கு அதிகாலை 3 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சின்னத்திரை உலகில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனது பயணத்தைத் தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்திருக்கிறார். தற்போது விஜய் டி.வி-யில் ஒளிப்பரப்பாகிவரும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்தார், இவரின் இந்த திடீர் தற்கொலை சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ உடனடியாகக் கீழ்க்காணும் அவசர உதவி மையம் எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 104

அடுத்த கட்டுரைக்கு