Published:Updated:

திருச்சி: தொடரும் பழிக்குப் பழி கொலைகள்! - அதிர்ச்சியில் மாநகர் மக்கள்

சிறு குற்றங்களுக்காகச் சிறை செல்லும் இளைஞர்கள், சிறையில் கிடைக்கும் ரெளடிகளின் சகவாசத்தால் கூலிப்படைகளாக உருவெடுக்கிறார்கள். காவல்துறையினர் மீது அச்சமில்லாத காரணத்தால்தான் தைரியமாக, ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்கூட கொலை செய்கி்றார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'அமைதியான நகரம்' எனப் பெயர் எடுத்திருந்த திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே பழிக்குப் பழியாகக் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. சில நாள்களுக்கு முன்பு, மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் சினிமாக் காட்சிகளை விஞ்சும் அளவுக்கு, அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள், மக்களை மிரட்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

திருச்சி மலைக்கோட்டை -
திருச்சி மலைக்கோட்டை -

சம்பவம் -1

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். பிரபல ரெளடியான இவர்மீது தில்லை நகர், காந்தி மார்க்கெட், கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த `வாழைக்காய்’ விஜய் என்பவருக்கும் காந்தி மார்க்கெட், பால்பண்ணை பகுதிகளில் கஞ்சா விற்பனை தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது.

நிஷாந்த் கொலை
நிஷாந்த் கொலை

கடந்த ஆண்டு நிஷாந்த், அவரின் நண்பர்கள் என ஒன்பது பேர் சேர்ந்து வாழைக்காய் விஜய்யை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலைசெய்தனர். இந்த வழக்கில் நிஷாந்த், குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் சிறையிலிருந்து வெளி வந்தார், நிஷாந்த். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி, ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே இருக்கும் கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற நிஷாந்த்தை ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது.

இந்தக் கொலை குறித்து, காந்தி மார்க்கெட் போலீஸார் விசாரணை நடத்தி, வாழைக்காய் விஜய்யின் சகோதரரான அரவிந்த், அவருடைய நண்பர்களான சுரேந்தர், மணிகண்டன், குருமூர்த்தி, காட்டு ராஜா, வேலு உள்ளிட்ட ஒன்பது பேரைக் கைதுசெய்தனர். `விஜய்யின் ஆன்மா சாந்தி அடைவதற்காக நிஷாந்தைக் கொலை செய்தோம்.

கொலை
கொலை

இதற்காக ஸ்கெட்ச் போட்டு, பத்து நாள்கள் காத்திருந்து கொலை செய்தோம்' என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறது, கைதான கொலைக் கும்பல். உளவுத்துறையினர் 'நிஷாந்தை கொல்லப்போகிறார்கள்' என்று காவல்துறையினருக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. போலீஸார் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் நிஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை

சம்பவம் - 2

திருச்சி, கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சக்திவேலுக்கும், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸுக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவந்திருக்கிறது. அலெக்ஸ் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இதற்கிடையே கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியிலுள்ள டாஸ்மாக் கடையில் சக்திவேலுவும், அவருடைய தம்பியான சின்ராஜும் முகத்தில் மாஸ்க் அணிந்து, டூ வீலரில் மது வாங்கச் சென்றிருக்கிறார்கள்.

நிஷந்தைக் கொலை செய்தவர்
நிஷந்தைக் கொலை செய்தவர்

அப்போது, அலெக்ஸ், சரத் உள்ளிட்ட எட்டுப் பேர் கொண்ட கும்பல், சக்திவேல் என நினைத்து சின்ராஜைத் தலையைத் துண்டித்துக் கொலைசெய்திருக்கிறது. சின்ராஜ் இறப்புக்கு அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில், 'விரைவில்...’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனால், பழிதீர்க்க கொலை நடக்கப்போவது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

திருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்

இந்தக் கொலைகள் குறித்து பாரத முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பாரதராஜா-விடம் பேசினோம். ``தொடர் கொலைகளால் கொலைநகரமாக மாறிக்கொண்டிருக்கிறது, திருச்சி. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்வதால், மக்கள் வெளியில் நடமாடவே பயப்படும் சூழ்நிலை உருவாகிவருகிறது.

பாரத முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பாரதராஜா
பாரத முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பாரதராஜா

தவறான வழியில் சென்று, சிறு குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், சிறையில் கிடைக்கும் ரெளடிகளின் சகவாசத்தால் கூலிப்படைகளாக உருவெடுக்கிறார்கள். காவல்துறையினர் மீது அச்சமில்லாத காரணத்தால்தான் தைரியமாக பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொலை செய்யத் துணிகிறார்கள். காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலைகளைத் தடுக்க வேண்டும்" என்றார்.

திருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருணிடம் பேசியபோது, ``தொடர் கொலைச் சம்பவங்களைத் தடுப்பதற்காகத் தனிப்படை உருவாக்கியிருக்கிறேன். ஒரே இரவில் மட்டும் மாநகரிலுள்ள 30-க்கும் மேற்பட்ட ரெளடிகளைச் சுற்றி வளைத்து, போலீஸார் தூக்கியிருக்கிறார்கள்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண்.

ஒவ்வொரு சம்பவத்திலும் நன்கு விசாரித்து, கொலைசெய்தவர்கள், பின்புலத்தில் இருந்தவர்கள் என அனைவர்மீதும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். நிஷாந்த் கொலையில் தகவல் கிடைத்தும் அலட்சியமாக நடந்துகொண்ட போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்போகிறோம். ரெளடிகளோடு தொடர்பில் இருப்பவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு