Published:Updated:

லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குச் சென்ற சார் பதிவாளர்களின் ரகசிய ஃபைல்கள்! - 7 பேர் அதிரடி இடமாற்றம்

லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய ஃபைல்
லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய ஃபைல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றிய சில அதிகாரிகளின் ரகசிய ஃபைல்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றன. அதன் அடிப்படையில் 7 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அதனால்தான் அதை விசாரிக்க, தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். சமீபத்தில்கூட சார் பதிவாளர் அலுவலகங்களிலுள்ள மேடை அகற்றப்படும் என அறிவித்தார். திடீரென ஆய்வு நடத்தி, குற்றச்சாட்டுகளில் சிக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது அமைச்சர் மூர்த்தி நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்தத் துறையில் ஊழல் நடைபெறாமலிருக்க ஆன்லைன் மூலமே அனைத்துப் பணிகளும் நடக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் ஊழலையும், இந்தத் துறையில் பணியாற்றும் சிலரையும் பிரிக்க முடியாத சூழல் நிலவிவருகிறது.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image
சென்னை:` ரூ.10,000 லஞ்சம்; சார் பதிவாளரிடம் விசாரணை; வெளிவந்த திடுக்கிடும் தகவல்!'

சில தினங்களுக்கு முன் சென்னை அண்ணாநகரில் குடியிருக்கும் முன்னாள் சார் பதிவாளர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கியதால் அவர் பணி ஓய்வு பெறாமலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டு என்கின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார். இதற்கிடையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார், பத்திரப் பதிவு, வணிகவரித்துறை ஆகியவற்றில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்த பட்டியலை ரகசியமாக சேகரித்திருக்கின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் விசாரணையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு சார் பதிவாளர்கள் முறைகேடாக பத்திரங்களைப் பதிவு செய்த தகவல் தெரியவந்திருக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அந்த சார் பதிவாளர்களுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவலும் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கியிருக்கிறது. மேலும், சென்னையில் அதிக அளவில் பத்திரப் பதிவு நடக்கும் சார் பதிவாளர் அலுவலகங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``பத்திரப் பதிவுத்துறையில் கடந்த ஆட்சியில் மட்டும் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆதாரங்களுடன் எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முருகனின் பெயரைக்கொண்ட சார் பதிவாளர் ஒருவர் முகப்பேரிலுள்ள வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சாதகமாகப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது துறைரீதியான விசாரணை நடந்துவரும் சூழலில், முறைகேடு செய்ததற்காக அவர் வாங்கிய லஞ்சப் பணம் குறித்த ரகசிய ஃபைலும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து வண்டலூர் அருகே அமைந்திருக்கும் ஒரு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு இடமாற்றப்பட்ட அதிகாரி ஒருவர், டபுள் டாக்குமென்ட் செய்து பல லட்சங்களைச் சுருட்டிய தகவலும் கிடைத்திருக்கிறது. மேலும் இந்தத் துறையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மூலம் தற்போதும் முறைகேடு நடந்துவருகிறது. விரைவில் பதிவுத்துறையில் ஊழல் செய்யும் அதிகாரிகள் ஆதாரங்களுடன் சிக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

செய்தி குறிப்பு
செய்தி குறிப்பு

இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறையின் பரிந்துரையின் பேரில் ஏழு சார் பதிவாளர்கள், 15 உதவியாளர்கள் உட்பட 30 பேர் பதிவில்லாத பணிக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து வணிகவரித்துறை, பதிவுத்துறையின் செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகின்றவா என்பது பல்வேறு வகைகளில் கண்காணிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய அலுவலகங்களின் அலுவலர்கள் கூர்நோக்கற்ற வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுவருகிறது.

``லஞ்சம் வாங்கிட்டு மணல் வண்டியைப் பிடிக்கலாமா?'' போலீஸாரைத் திட்டிய நபர் மீது வழக்கு பதிவு!

அந்த வகையில் அந்தத் துறையினரின் ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட குன்றத்தூர், மேட்டுப்பாளையம், செங்குன்றம், தேவகோட்டை, பாபநாசம், சோளிங்கர், சின்னமனூர், கறம்பக்குடி, ஓசூர், கடையநல்லூர், நிலக்கோட்டை, போடியநாயக்கனூர், அந்தியூர், திருச்செங்கோடு, மணப்பாறை, விளாத்திக்குளம், மன்னார்குடி, தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், வல்லம் (திண்டிவனம்) ஆகிய சார் பதிவாளர் அலுவலங்களில் பணியாற்றிய 7 சார் பதிவாளர்கள், 15 உதவியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள், 6 அலுவலக உதவியாளர்கள் என 30 பேர் பதிவில்லாத பணிக்கு மாற்றி அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். பதிவத்துறையின் நேர்மையான செயல்பாடுகளை உறுதிப்படுத்த செய்யப்படும் பல்வேறு சீர்திருத்தங்களில் ஒரு பகுதியாக இம்மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு