Published:Updated:

கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனப் பொய் புகார்; காதலனை கரம்பிடிக்க நாடகமாடிய இளம்பெண்!

பாலியல் வன்கொடுமை
News
பாலியல் வன்கொடுமை ( சித்தரிப்புப் படம் )

அந்தப் பெண்ணிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்திய போது, பாலியல் வன்கொடுமை நடந்ததாகத் தான் பொய் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தன்னை நாக்பூர் சிகாலி என்ற இடத்தில் மர்ம நபர்கள் இரண்டு பேர் வேனில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸில் புகார் செய்தார். அந்தப் புகாரைப் பெற்றவுடன் போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் நேரடியாகப் புகார் கொடுக்கப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணையை மேற்பார்வையிட்டார்.

சம்பந்தப்பட்ட பெண், தான் மருத்துவ பரிசோதனைக்காகச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வேனில் வந்த இரண்டு பேர் தன்னிடம் குறிப்பிட்ட சாலையின் பெயரைச் சொல்லி எங்கிருக்கிறது என்று கேட்டதாகவும், தான் அவர்களுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோது கட்டாயப்படுத்தி தன்னை வேனில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட வேனையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பதற்காக போலீஸார் 40 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆயிரம் போலீஸார் நாக்பூர் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பொய் பாலியல் புகார்
பொய் பாலியல் புகார்
சித்தரிப்புப் படம்

சம்பந்தப்பட்ட பெண் சம்பவம் நடந்ததாகக் கூறிய இடத்திலிருந்த 250 கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகள் முழுமையாகச் சோதிக்கப்பட்டன. ஆயிரம் போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக கமிஷனர் அமிதேஷ் தலைமையில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண் சென்ற இடத்திலிருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ததில், அவர் பொய் சொல்வது தெரிய வந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்திய போது, பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும், தன் காதலனைத் திருமணம் செய்வதற்காக அவ்வாறு நாடகமாடியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார். அதையடுத்து, அனைத்து காவல்நிலையங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து விசாரணையை நிறுத்திய போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz