Published:Updated:

சென்னை: தனிமையிலிருந்த 13 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் - காவல்நிலையத்தில் புகார்!

பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

வீட்டில் தனிமையிலிருந்த 13 வயது சிறுமிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த 5 நபர்களால் பாலியல் கொடூரம் நடந்துள்ளது.

சென்னை: தனிமையிலிருந்த 13 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் - காவல்நிலையத்தில் புகார்!

வீட்டில் தனிமையிலிருந்த 13 வயது சிறுமிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த 5 நபர்களால் பாலியல் கொடூரம் நடந்துள்ளது.

Published:Updated:
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

சென்னை புறநகர்ப் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை, அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வந்து மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் அம்மா ஒரு வருடத்துக்கு முன்பாக வீட்டை விடு வெளியேறிச் சென்றுவிட்டார். அந்த சிறுமியின் அண்ணன் தான் மெக்கானிக் வேலை செய்து படிக்கவைத்துள்ளார். இந்த சூழலில், அந்த பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கும்பல் ஒன்றுக்கும், இந்த சிறுமியின் அண்ணனின் நண்பர் ஒருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

பிரச்னை வலுப்பெறவே அந்த நண்பர் குடும்பத்தோடு வேறுபகுதிக்குச் சென்றுவிட்டார். அந்த நண்பரின் குடும்பம் எங்கு சென்றது என்று கேட்டு, அந்த ஐந்து பேரும் சிறுமியையும் அவரின் அண்ணனையும் மிரட்டுவதும் அடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து அந்த சிறுமியின் அண்ணன் அவரின் மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தந்தை குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் இருப்பதையும், சிறுமி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்ட அந்த ஐந்து பேரும், சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்து பேரும் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சித்திரவதை தாங்காத சிறுமி செய்வதறியாது, தனக்குப் பாதுகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். அந்த புகாரில் மேற்கண்ட விஷயங்களை அவர் தெரிவித்திருக்கிறார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism