Published:Updated:

சென்னையிலும் ஒரு ‘நாகர்கோவில் காசி’! - லவ்லி கணேஷின் செக்ஸ் டார்ச்சர்...

லவ்லி கணேஷின் செக்ஸ் டார்ச்சர்...
பிரீமியம் ஸ்டோரி
News
லவ்லி கணேஷின் செக்ஸ் டார்ச்சர்...

புதுசு புதுசா பல பெண்களோட செக்ஸ் வீடியோக்களைக் காட்டி, ‘எனக்கு நீ 11-வது பொண்டாட்டி’னு சொன்னான்.

சமூக வலைதளங்களில் காதல் என்கிற பெயரில் தூண்டில் வீசி ஏமாற்றும் காமுகர்கள் பலரது முகமூடிகள் கிழிந்தாலும், ஏமாற்றும் சம்பவங்கள் மட்டும் நின்றபாடில்லை. இதோ... நாகர்கோவில் காசிபோலவே ஃபேஸ்புக்கில் இளம்பெண்களுடன் பழகி, காதலிப்பதாகக் கூறி, ஓர் இளம் பெண்ணுக்கு வக்கிரமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சம்பவம், தமிழகத்தின் தலைநகரிலும் நடந்துள்ளது. சென்னை, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையப் படியேறிய 20 வயதான இளம்பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையை இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியிடம் கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். அவர் அளித்த ஸ்டேட்மென்ட் அப்படியே இங்கே...

சென்னையிலும் ஒரு ‘நாகர்கோவில் காசி’! - லவ்லி கணேஷின் செக்ஸ் டார்ச்சர்...

‘‘நான் ஒரு பியூட்டிஷியன். சென்னை வில்லிவாக்கம், பாரதிநகரைச் சேர்ந்த லவ்லி கணேஷ்ங்கிற கணேஷ் 2017-ம் ஆண்டு எனக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானான். ரெண்டு பேரும் காதலிச்சோம். 5.12.2020-ல ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துலவெச்சு கணேஷ் எனக்குத் தாலி கட்டினான். கொஞ்ச நாள்ல என் நகைகளை அடமானம்வெச்சு வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல வாடகை வீட்டுல குடியேறினோம். அன்னிக்கே அயனாவரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து, வீட்டு வேலைக்கு கூட்டிட்டு வந்திருக்கிறதா சொன்னான். அதை உண்மைனு நம்பினேன். மூணு பேரும் ஒரே வீட்டுலதான் தங்கியிருந்தோம். ஆனா, அவங்க ரெண்டு பேரோட நடவடிக்கையில சந்தேகமடைஞ்ச நான், கணேஷ்கிட்ட சண்டை போட்டேன். அப்பதான், அந்த சின்னப் பொண்ணையும் அவன் லவ் பண்றதா நடிச்சு, கூட்டிக்கிட்டு வந்திருக்குறது தெரிஞ்சுது. அதுக்கு அப்புறம் என்னை அடிச்சு ஆபாசமா திட்டி, ‘கொன்னுடுவேன்’னு மிரட்டினான். அப்ப இருந்து ஆரம்பிச்சுது அவனோட செக்ஸ் டார்ச்சர்... சொல்லப்போனா, அவன் நார்மலாவே என்கிட்ட நடந்துக்கலை.

சென்னையிலும் ஒரு ‘நாகர்கோவில் காசி’! - லவ்லி கணேஷின் செக்ஸ் டார்ச்சர்...

அடிக்கடி என்னோட ரெண்டு கைகளைக் கட்டி, வாயையும் துணியால பொத்தி மிருகத்தனமா உடலுறவுல ஈடுபட்டான். கட்டாயப்படுத்தி மது அருந்தவெச்சான். நான் மது மயக்கத்துல இருந்தப்ப என் டிரெஸ்ஸைக் கழட்டி, அந்தச் சின்னப் பொண்ணோட ஒண்ணா இருக்கிற மாதிரி வெச்சு, அதை செல்போன்ல வீடியோவா எடுத்தான். அவன் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, அந்த வீடியோவைக் காட்டி குரூப் செக்ஸ்ல ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினான். நான் கத்திக் கூச்சல் போட்டு அழுததால, அவங்க போயிட்டாங்க. புதுசு புதுசா பல பெண்களோட செக்ஸ் வீடியோக்களைக் காட்டி, ‘எனக்கு நீ 11-வது பொண்டாட்டி’னு சொன்னான். அதைக் கேட்டு ஷாக் ஆகிட்டேன். அப்புறமா, பூட்டின அறையில இருந்து ஹவுஸ் ஓனர் உதவியோட தப்பிச்சு வெளியில வந்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, செக்ஸ் டார்ச்சர் தாங்காமல், அந்த 17 வயது சிறுமியும் தப்பித்து வந்திருக்கிறார். இருவரும் கொடுத்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் 417, 376, 294 பி, 506 (1), போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் லவ்லி கணேஷ் மீது வழக்கு பதிந்து, கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் பேசினோம். ‘‘லவ்லி கணேஷ் 17 வயது சிறுமியையும் ஃபேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறான். ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடனும் குடும்பம் நடத்தியிருக்கிறான். 9-ம் வகுப்பு வரை படித்த கணேஷுக்கு, வேலை எதுவும் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்திருக்கிறான். அவர்களுக்குக் குழந்தையும் பிறந்திருக்கிறது. கணேஷின் சுயரூபம் தெரிந்த அந்தப் பெண், குழந்தையுடன் பெங்களூரு சென்றுவிட்டார். அதன் பிறகுதான் கணேஷ், இன்னும் சில பெண்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவந்திருக்கிறான். இதற்காக ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றியிருக்கிறான். தன் முகத்தை பல ஆப்கள் மூலம் அழகாக மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறான். செல்போனிலுள்ள அந்தரங்க வீடியோக்களின் அடிப்படையிலும் விசாரித்துவருகிறோம். கணேஷால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்” என்றார்கள்.

விஜயகுமார்
விஜயகுமார்

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கறிஞர் விஜயகுமாரிடம் பேசினோம். ‘‘ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். கணேஷிடம் ஏமாந்த 17 வயது சிறுமியும் கணேஷுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்ததால், போக்சோ சட்டத்தின் கீழும் அவன்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். கணேஷின் செல்போனில் நிறைய பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருக்கின்றன. இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது’’ என்றார்.

இளம்பெண்ணின் வாக்குமூலத்தைப் பார்க்கும்போது, ‘இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்குமோ?’ என்ற வழக்கறிஞரின் சந்தேகத்தைப் புறம்தள்ள முடியவில்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்!