Published:Updated:

ஊட்டி அரசு கலைக் கல்லூரி பேராசிரியையின் பாலியல் தொல்லை புகார்... பேராசிரியர் மீது வழக்கு பதிவு!

ஊட்டி அரசு கலைக் கல்லூரி

``இக்கல்லூரியில் சில பேராசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரமே இன்னும் ஓயவில்லை. தற்போது பாலியல் புகார்களும் அதிகரித்துள்ளன” என்கிறார்கள்.

ஊட்டி அரசு கலைக் கல்லூரி பேராசிரியையின் பாலியல் தொல்லை புகார்... பேராசிரியர் மீது வழக்கு பதிவு!

``இக்கல்லூரியில் சில பேராசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரமே இன்னும் ஓயவில்லை. தற்போது பாலியல் புகார்களும் அதிகரித்துள்ளன” என்கிறார்கள்.

Published:Updated:
ஊட்டி அரசு கலைக் கல்லூரி

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றிவரும் ஒருவர், தமிழ்ப் பேராசிரியர் தர்மலிங்கம் என்பவர், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயலும் வகையில் பேசியதாக பிப்ரவரி மாதம் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் புகார் குறித்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் கல்லூரி நிர்வாகத்தினர் முறையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இதனிடையே அத்துமீறலில் ஈடுபட்ட தமிழ்ப் பேராசிரியர் தர்மலிங்கத்துக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அரசு கலைக்கல்லூரி
அரசு கலைக்கல்லூரி

உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் களமிறங்கிய பாதிக்கப்பட்ட பேராசிரியை, புகார் மனுவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர் கல்லூரி கல்வி இயக்ககம், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை போன்ற பல இடங்களுக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து, தனி டி.எஸ்.பி-யை நியமித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். தமிழ்ப் பேராசிரியர் தர்மலிங்கம், பெண்பேராசிரியையிடம் பாலியல் அத்துமீறும் நோக்கத்தில் பேசியது விசாரணையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து தர்மலிங்கம் மீது வழக்கு பதிவுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பேராசிரியர் தர்மலிங்கம்
அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பேராசிரியர் தர்மலிங்கம்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "அந்தப் பேராசிரியை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே கல்லூரியில் பணியாற்றிவருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், 23-ம் தேதியன்று கல்லூரி முதல்வர் தமிழ்த்துறைப் பேராசிரியர் தர்மலிங்கம், அந்த உதவிப் பேராசிரியை ஆகியோர் கல்லூரி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தில் உள்ள வகுப்புகளின் விவரங்களைச் சேகரிக்கச் சென்றுள்ளனர். கணக்கெடுப்புப் பணி முடிந்து திரும்பும்புகையில், பேராசிரியர் தர்மலிங்கம், உதவிப் பேராசிரியையிடம் இயல்பாக நலம் விசாரித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீரென பேராசிரியையின் உடல் அங்கங்களை அருவருக்கத்தக்க வகையில் வெளிப்படையாக வர்ணித்திருக்கிறார். தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நோக்கத்தில் பேசியதைச் சற்றும் எதிர்பார்த்திராத அந்தப் பேராசிரியை அங்கிருந்து உடனடியாகத் தனியே சென்றிருக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தர்மலிங்கம் வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்திவருகிறோம்" என்றார்.

கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி
கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி

ஊட்டி அரசுக் கல்லூரி குறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர் ஒருவர், "ஏற்கெனவே இந்தக் கல்லூரியில் சில பேராசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரம் ஓயவில்லை. தற்போது பாலியல் புகார்களும் அதிகரித்துள்ளன. பிஹெச்‌‌.டி ஆய்வுக்கு வரும் சில மாணவிகளிடம் ஒரு சில பேராசிரியர்கள் அத்துமீறியிருப்பதாகப் புகார்கள் வருகின்றன. தனிக்குழு அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். "தமிழ்ப் பேராசிரியர் தர்மலிங்கம் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருப்பது குறித்து காவல்துறையிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். அங்கிருந்து வரும் உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism