Published:Updated:

தொடர் பாலியல் துன்புறுத்தல்... மன உளைச்சலால் உயிரை மாய்த்த சிறுமி! - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

உத்தரப்பிரதேசத்தில் இரு இளைஞர்களின் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் பகுதியிலுள்ள அசலட்கஞ்ச் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

10-ம் வகுப்பு படிக்கும் மாணவியான அந்தச் சிறுமி , கடந்த சில நாள்களாகத் தனது வீட்டின் அருகே வசித்துவரும் இரண்டு இளைஞர்களால் பாலியல் துன்புறுதலுக்கு ஆளாகிவந்திருக்கிறார். இதை வெளியில் சொன்னால் தனது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி அமைதியாகவே இருந்திருக்கிறார்.

எனினும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது வீட்டிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
Representational Image

அவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இந்தநிலையில், காவல்துறையினர் சிறுமியின் அறையைச் சோதனையிட்டதில் சிறுமி எழுதிய ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் இரண்டு இளைஞர்களின் பாலியல் துன்புறுதலால்தான் தான் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக எழுதியிருக்கிறார்.

இதனடிப்படையில் இரண்டு இளைஞர்களையும் கைதுசெய்த போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதே போன்ற மற்றொரு சம்பவமும் உத்தரப்பிரதேச பான்டா நகரில் நடந்திருக்கிறது. இதில் சிறுமியை 15 வயதுக்கும் குறைவான மூன்று சிறுவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர், அவர்களில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மீதி இருவரைத் தேடிவருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு