Published:Updated:

`ஸ்டார்ஹோட்டல்; பாலியல் வன்கொடுமை; எம்.எல்.ஏ மகன் வேடம்!' - பெங்களூர் போலீஸை அதிரவைத்த தமிழக இளைஞர்

பெங்களூருவில் எம்.எல்.ஏ மகன் எனக் கூறி இளம்பெண்களை காதலை வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்த தமிழக இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதான ஜஹாங்கீர்
கைதான ஜஹாங்கீர்

பெங்களூரு காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் தன்னை நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்தார். இதேபோல் சில வழக்குகள் பதிவானது. கார்த்திக் ரெட்டி மற்றும் கிரண் ரெட்டி என்பவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தது. எம்.எல்.ஏ மகன், கர்நாடகாவில் பெரிய கோடீஸ்வரனின் மகன் என்றே புகார்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறையின் விசாரணையில் இளம்பெண்கள் தவறான நபரிடம் ஏமாந்தது தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பெங்களூருவில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மாலில் இருக்கும் போதுதான் அந்த நபருடன் சந்திப்பு ஏற்பட்டதாக விசாரணையில் புகார் கொடுத்திருந்த பெண்கள் கூறியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்த புகைப்படங்களை கொண்டு காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இதனையடுத்து இளம்பெண்களை ஏமாற்றிய கார்த்திக் ரெட்டி என்கிற ஜஹாங்கீரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிங்க் நிற பேன்ட்; மூக்குத்தி! - பெரும்பாக்கம் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

இதுகுறித்து பேசிய பெங்களூரு காவல்துறையினர், ``ஷாப்பிங் மால்களுக்கு தனியாக வரும் இளம்பெண்களிடம் இந்த நபர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். இவரது உண்மையான பெயர் ஜஹாங்கீர் தமிழகத்தை சேர்ந்தவர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்தான் சொந்த ஊர். இவர் எம்.பி.ஏ பட்டதாரி. ஷாப்பிங் மால்களுக்கு வரும் இளம்பெண்களின் தன்னை கார்த்திக் ரெட்டி அல்லது கிரண் ரெட்டி என அறிமுகமாவார். இவர் மீது புகார் கொடுத்த இளம்பெண்கள் இந்த பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். நான் எம்.எல்.ஏ-வின் மகன் அம்மா மருத்துவராக இருக்கிறார் என பொய் சொல்லி தான் பெண்களிடம் அறிமுகமாவார். இந்த பொய்கள் அவரது சமூக அந்தஸ்தை உயர்த்தி காட்டுகிறது. இதன்காரணமாக இளம்பெண்களும் சகஜமாக பழகியுள்ளார்.

மோசடி
மோசடி

உரையாடல்கள் தொடர்ந்த போது நான் நகைக்கடை வைத்துள்ளேன். பிசினஸ் செய்கிறேன் எனக் கூறி நம்பவைத்துள்ளார். எப்போதும் காரில் தான் வலம் வருவார். தமிழக பதிவு எண் கொண்ட அந்த வாகனம்தான் இவரை பிடிப்பதற்கும் எங்களுக்கு உதவியாக இருந்தது. வேலை தேடும் பெண்கள் என்றால், `என்னுடைய நிறுவனத்தில் வேலை தருகிறேன். வா பேசலாம்' என சொகுசு கார்களில் இளம்பெண்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து செல்வார்.

`ஆபாச வீடியோ; பாலியல் சீண்டல்!'- நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியர் செயலால் கொதித்த பெற்றோர்

அவர்களுடைய கிரெடிட் கார்டிலே ஹோட்டலில் அறை எடுத்து தங்குவார். இப்படி சில பெண்களை ஹோட்டல் அறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில பெண்களிடம் பணங்களை கறந்துள்ளார். அவர்கள் மூலம் நகைகள் மற்றும் ஆடைகளை வாங்கியுள்ளார். `விளம்பரப் படங்களில் நடிக்க வைக்கிறேன். மாடலிங் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்க வைக்கிறேன்' என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இளம்பெண்களை ஏமாற்றி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.

Arrest
Arrest

ஜஹாங்கீர் பயன்படுத்திய தமிழக பதிவெண் கொண்ட காரை பறிமுதல் செய்துள்ளோம். ஏராளமான செல்போன்கள் இளம்பெண்களை ஏமாற்றி வாங்கிய் விலையுயர்ந்த பொருள்கள் பறிமுதல் செய்துள்ளோம். 2017-ம் ஆண்டில் இருந்து இதுபோன்றகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இவர் மீது சென்னையில் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. முழுமையான விசாரணைக்கு பின்னரே முழுத்தகவலும் தெரிய வரும்” என்றனர்.