Published:Updated:

`ஆபாச வீடியோ; பாலியல் சீண்டல்!'- நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியர் செயலால் கொதித்த பெற்றோர்

Representational image
News
Representational image

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் உஷா, சுரேஷை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். ஆனால், காவல்துறையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ராசிபுரம் அருகே அரசுப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் மாணவிகளின் பெற்றோர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்து நடுநிலைப்பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்புக்கு கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சுரேஷ் (37). இவர் தனது வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோவைப் போட்டுக் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாணவிகளின் தொடர் புகாரால் கொந்தளித்த பெற்றோர், நேரடியாக மாவட்ட கல்வி அலுவலகத்திலும் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 9-ம் தேதி நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் உஷா, சுரேஷை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். ஆனால் காவல்துறையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆசிரியர் சுரேஷ் மீதான புகார் குறித்து மாணவிகளின் பெற்றோர்களிடம் பேசினோம். ''இப்பள்ளியில் ஒருகாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். தற்போது இந்த நடுநிலைப்பள்ளியில் மொத்தம் 49 குழந்தைகள் மட்டுமே படித்து வருகிறார்கள். அதிலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளே அதிகம் படித்து வருகின்றனர்.

ஆசிரியரின் செயலால், மனநலரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்

கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சுரேஷ், மாணவிகளின் தோளில் கை போடுவதும் தவறாகச் சீண்டுவதும் ஆபாச வீடியோவை மொபைலில் காட்டுவதும் என மாணவிகளுக்குத் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மனநலரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, புகார் கொடுத்தோம். ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரிடம் விசாரணையை நடத்தி, சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால், சஸ்பெண்டு முடிந்து வேறு பள்ளிக்குச் சென்றாலும் இதே காரியத்தை அவர் தொடர்வார்" எனக் கொந்தளிக்கின்றனர்.

ஆசிரியர் சுரேஷ் விவகாரம் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் பேசினோம். ``அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடமும் சக ஆசிரியர்களிடமும் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு அவரை துறைரீதியாக சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேற்கொண்டும் விசாரணை நடத்தி வருகிறோம். புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிப்போம்'' என்றார் உறுதியாக.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, ஆசிரியர் சுரேஷிடம் பேச முயன்றோம். அவரது செல்போன், சுவிட்ச் ஆஃப் நிலையிலேயே இருக்கிறது.