Published:Updated:

புதுக்கோட்டை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை... உறவினருக்கு சாகும் வரை ஆயுள் - மகிளா நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பூவானம் பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வானக்கன்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார் அச்சிறுமியின் தாய். அப்போது, சிறுமியின் தாயாரின் சகோதரர் முருகேசன் (36) சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முருகேசன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்

கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். அதோடு, ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டுச் சிறை அனுபவிக்க வேண்டும். மேலும், சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.