Published:Updated:

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - சமையல் தொழிலாளி போக்சோவில் கைது

ரவீந்திரன்

பரமக்குடியில் திருமண மண்டபத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைக் கழிவறைக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளியை போலீஸார் போக்சோவில் கைதுசெய்துள்ளனர்.

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - சமையல் தொழிலாளி போக்சோவில் கைது

பரமக்குடியில் திருமண மண்டபத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைக் கழிவறைக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளியை போலீஸார் போக்சோவில் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
ரவீந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சமையல் கான்ட்ராக்டர் ஒருவர், சுப நிகழ்ச்சிகளுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து செய்துவருகிறார். இதற்காக சமையல் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோரை வேலைக்கு வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்திருந்த அவர், திருமண மண்டபத்துக்குத் தன் மூன்று வயது குழந்தையையும் கூட்டிச் சென்றிருக்கிறார். குழந்தையை மண்டபத்தில் விளையாட வைத்துவிட்டு தொழிலாளர்களுடன் சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்தார்.

சிறார் வதை
சிறார் வதை


இந்நிலையில் அவரின் குழந்தை திடீரென காணாமல்போனதால் மண்டபம் முழுக்கத் தனது தொழிலாளர்களுடன் தேடியிருக்கிறார். அப்போது ஆண்கள் கழிவறைக்குள்ளிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிவறையின் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர்.

அப்போது, தான் சமையல் வேலைக்கு வைத்துள்ள எமனேஸ்வரம் முதலியார் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (50) தனது குழந்தையை தூக்கிச் சென்று கழிவறைக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமையல் கான்ட்ராக்டர் கொடுத்த புகாரின் பேரில் ரவீந்திரனை போக்சோ வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism