Published:Updated:

லட்சங்களில் டிக்கெட்; சொகுசு கப்பலில் 'போதை' பார்ட்டி; ஷாருக்கானின் மகனிடம் விசாரணையா?

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபார்ட்டி நடந்தது. அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி பார்ட்டியில் போதைப்பொருள் வைத்திருந்த பாலிவுட் நடிகரின் மகன் உட்பட முக்கிய பிரமுகர்களைப் பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. இதில் நடிகர்கள், நடிகர்களின் மகன்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பார்ட்டியில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி போதைப்பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 10 பேரை அதிகாரிகள் பிடித்தனர்.

ரெய்டு நடத்திய சமீர்
ரெய்டு நடத்திய சமீர்
சென்னைக்கு ஆந்திராதான் கஞ்சா குடோன்; `சப்ளை பாய்ஸ்’  டெலிவரி - `போதை ஹப்’ ஆகிறதா தலைநகரம்?

பிடிபட்டவர்களில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மகனும் ஒருவர் எனச் சொல்லப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஒருவரும் பிடிபட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதை பார்ட்டியில் பங்கேற்க ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சத்தில் இருந்து இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் தெரிவித்தார். பிடிபட்ட பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானிடம் விசாரித்தபோது, பார்ட்டியில் பங்கேற்க தான் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். இப்போதை பார்ட்டி தொடர்பாக விசாரிக்க சொகுசு கப்பல் உரிமையாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பார்ட்டி நடந்த கப்பல் மீண்டும் மும்பைக்கே திரும்பக் கொண்டு வரப்பட்டது. கப்பலிலும் அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். பிடிபட்ட அனைவரையும் மும்பைக்குக் கொண்டு வந்து அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர். இது போன்ற பார்ட்டிகளை நடத்துபவர்கள் அளவுக்கு அதிகமாக கப்பலில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மற்றவர்களை கப்பலில் பயணம் செய்ய விடாமல் தடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் தான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், கோவா போலீஸாரும் இணைந்து கோவாவில் நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலி கேப்ரில்லாவின் சகோதரர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவருக்கும் இந்த பார்ட்டிக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு