Published:Updated:

கோவை: ஓடும் காரிலிருந்து வீசப்பட்டதா பெண்ணின் சடலம்? - அதிரவைக்கும் சிசிடிவி

கார் - சடலம்
கார் - சடலம்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் காரிலிருந்து பெண்ணின் சடலம் வீசப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்பு, பல வானங்கள் ஏறி இறங்கியதில் அந்தச் சடலம் உருகுலைந்துவிட்டது.

சம்பவம் நடந்த பகுதி
சம்பவம் நடந்த பகுதி
கோவை சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதி! செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

சாலை விபத்தால் அந்தப் பெண் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியானது. இது குறித்து போலீஸார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

சின்னியம்பாளையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகாலை 5:45 மணியளவில் அந்தப் பகுதியை ஓர் எஸ்.யூ.வி ரக கார் கடக்கும்போது, ஒரு சடலம் சாலையில் விழும் காட்சி பதிவாகியிருக்கிறது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இதனால், கொலை செய்யப்பட்டு பெண்ணின் உடல் வீசப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. அதேநேரத்தில், சாலை விபத்தில் பெண்ணின் சடலம் காரில் சிக்கி இழுத்து வரப்பட்டு, பின் பிரிந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை: 16 வெட்டுக் காயங்கள்; பழிக்குப் பழி தீர்த்த போதை இளைஞர்கள்! - அதிர்ச்சி சம்பவம்

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு 45-50 வயது இருக்கலாம் என்பதும், அவரது உடல் அரை நிர்வாணமாக இருந்ததும் தெரியவந்டிருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதால் முகம், தலைப்பகுதி ஆகியவை முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

சாலையில் சடலம்
சாலையில் சடலம்

பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே பெண்ணின் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது கணியூர் சுங்கச்சாவடியில் கடந்து சென்ற வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு