Published:Updated:

`போலீஸ் வேலை டு கொலை வழக்கு..!’- கோவை சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் மணிகண்டனின் பின்னணி

கோவை, சிறுமி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மணிகண்டன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல்
பாலியல்

கோவையில் ப்ளஸ் ஒன் படித்து வந்த 17 வயது சிறுமி தனது உறவினர் ஒருவரை காதலித்துவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அந்த இளைஞருடன் சிறுமி அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றுள்ளார்.

பாலியல்
பாலியல்

அப்போது, அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை தாக்கியதுடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக, ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயணமூர்த்தி ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து, அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம். ``மணிகண்டன் ஆஜானுபாகுவாக இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலைக்கு முயற்சி செய்துவந்தார்.

கைது
கைது

அந்த முயற்சிக்குப் பலனாக அவருக்கு வேலையும் கிடைத்தது. ஆனால், வேலையில் சேருவதற்கு முந்தைய நாள், மணிகண்டனுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், அந்த மற்றொரு நபர் மணிகண்டனை கெட்டவார்த்தையில் திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த நபரை கொலை செய்துவிட்டார். இதனால், மணிகண்டனால் போலீஸாக முடியவில்லை. தற்போது பாலியல் வழக்கும் சேர்ந்துவிட்டது. போலீஸ் ஆகியிருக்க வேண்டியவரை, அதே துறை குற்றவாளியாக தேடிக்கொண்டிருக்கிறது” என்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டதற்கு, சம்பவம் நடைபெற்ற இடம் மிகவும் ஆபத்தான பகுதி. யாரையாவது அடித்துப் போட்டால் கூட சத்தம் வெளியில் கேட்காது. அங்கு யாருமே செல்ல மாட்டோம்.

பாலியல்
பாலியல்

ஊடகங்களைப் பார்த்துத்தான் எங்களுக்கே விஷயம் தெரிந்தது. இதுபோன்ற குற்றங்களை எல்லாம் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்றனர்.