Published:Updated:

டெல்லி: `35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி; புதிய ஃபிரிட்ஜ்; கூகுள் உதவி’-வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

பூனாவாலா-ஷ்ரத்தா

ஷ்ரத்தாவைக் காணவில்லை என்று அவரின் நெருங்கிய நண்பர் லட்சுமணன், அவரின் தந்தையிடம் தெரிவித்தார். அவரின் தந்தையும் ஷ்ரத்தாவைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இது குறித்து மும்பை வசாய் போலீஸில் புகார் செய்தார்.

டெல்லி: `35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி; புதிய ஃபிரிட்ஜ்; கூகுள் உதவி’-வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

ஷ்ரத்தாவைக் காணவில்லை என்று அவரின் நெருங்கிய நண்பர் லட்சுமணன், அவரின் தந்தையிடம் தெரிவித்தார். அவரின் தந்தையும் ஷ்ரத்தாவைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இது குறித்து மும்பை வசாய் போலீஸில் புகார் செய்தார்.

Published:Updated:
பூனாவாலா-ஷ்ரத்தா

மாநிலங்கள் கடந்து நாட்டையே உலுக்கியிருக்கிறது ஒரு கொலைச் சம்பவம். தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த காதலியைக் கொலைசெய்து, 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை பிரத்யேகமாக வாங்கி வந்த குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துவைத்திருக்கிறார் காதலன் ஒருவர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன?

மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா வால்கர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் 2019-ம் ஆண்டு டேட்டிங் ஆப் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து கால் சென்டரில் வேலை செய்ய ஆரம்பித்தனர். பின்னர் பூட் பிளாக் என்று தனியாகத் தொழில் ஆரம்பித்து நடத்திவந்தனர். இதற்காக இருவரும் அடிக்கடி நாடு முழுவதும் பயணம் செய்தனர். இதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனது பெற்றோருடன் சண்டையிட்டுக்கொண்டு, தனியாகச் சென்று, தன் காதலனுடன் ஷ்ரத்தா வாடகை வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்.

கொலையாளி பூனாவாலா
கொலையாளி பூனாவாலா

இருவரும் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்தனர். ஆனால் அடுத்தடுத்த நாள்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து கருத்து வேறுபாடுகளை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க, தங்கள் பெற்றோரிடம்கூட சொல்லாமல் ஷ்ரத்தா தன் காதலனுடன் ஏப்ரல் மாதம் இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார். அங்கிருந்து நேராக டெல்லிக்கு வந்து சத்தர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இதற்கிடையே திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்திருக்கிறது. இதனால் ஷ்ரத்தாவைக் கொலை செய்ய முடிவுசெய்து, அதற்காக எப்படி இறைச்சி வெட்ட வேண்டும் என்பது குறித்து இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக்கொண்ட அஃப்தாப், ஷ்ரத்தாவை கடந்த மே 20-ம் தேதி கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.

கொலைக்குப் பிறகு தடயத்தை மறைக்க, கூகுளில் ரத்தக் கறையை எப்படிக் கழுவ வேண்டும் என்று பார்த்து அதன்படி ரசாயானங்களை பயன்படுத்தி கழுவியிருக்கிறார். பின்னர் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றைப் பிரத்யேகமாக வாங்கிவந்த குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துவைத்திருக்கிறார். வீட்டில் வாசனை வரக் கூடாது என்பதற்காக அகர்பத்தி பொருத்தியிருக்கிறார். அடிக்கடி ஃபிரிட்ஜிலிருந்து ஒவ்வொரு உடல் பகுதியாக எடுத்துச் சென்று டெல்லிக்கு வெளியில் இருக்கும் வனப்பகுதியில் போட்டுவந்திருக்கிறார்.

சில நேரங்களில் நள்ளிரவில் உடல் பகுதியை நாய்களுக்குச் சாப்பிடவும் கொடுத்திருக்கிறார். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அங்கித் சவுகான் கூறுகையில், ``ஷ்ரத்தாவைக் காணவில்லை என்று அவரின் நெருங்கிய நண்பர் லட்சுமணன், அவரின் தந்தையிடம் தெரிவித்தார். அவரின் தந்தையும் ஷ்ரத்தாவைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இது குறித்து மும்பை வசாய் போலீஸில் புகார் செய்தார். வசாய் போலீஸார் அந்தப் பெண்ணின் மொபைல் நம்பர் மூலம் அவரைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

அஃப்தாப் பூனாவாலா-ஷ்ரத்தா
அஃப்தாப் பூனாவாலா-ஷ்ரத்தா

ஆனால் போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தப் புகாரை மும்பை போலீஸார், டெல்லி போலீஸாருக்கு அனுப்பிவைத்தனர். டெல்லி போலீஸார் உடனே பூனாவாலாவைப் பிடித்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியபோதுதான் கொலைசெய்யப்பட்ட விவகாரம் தெரியவந்திருக்கிறது. கொலை நடந்து ஆறு மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருந்தது.

கொலை செய்த பிறகு உடல்களைப் பல பகுதியில் வீசியதால் ஒரு சில எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவும் அந்தப் பெண்ணின் எலும்புகள்தானா என்று தெரியவில்லை. கொலையை மறைப்பதற்காக அந்தப் பெண்ணின் சமூக வலைதளக் கணக்கில் பூனாவாலா அடிக்கடி தகவல்களை பதிவிட்டுவந்திருக்கிறார். அதோடு அந்தப் பெண்ணின் கிரெடிட் கார்டு பில்களையும் கட்டியிருக்கிறார். திருமண நெருக்கடி, இருவருக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு இருந்த சந்தேகம் போன்ற காரணங்களால் இந்தக் கொலை நடந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
ட்விட்டர்

டெல்லிக்குச் சென்றிருக்கும் ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில், ``பூனாவாலா எனது மகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறான். எனவே அவனைத் தூக்கிலிடுங்கள். போலீஸார் எட்டு உடற்பகுதிகளை மட்டுமே எடுத்துள்ளனர். அவற்றைக்கொண்டு எப்படி அது என் மகள் என்று சொல்ல முடியும்... என் மகள் உயிரோடு இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படிக் கொலைசெய்யப்பட்டிருந்தால் பூனாவாலாவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். என் மகளை பூனாவாலா துண்டு துண்டாக வெட்டியிருந்தால் பூனாவாலாவையும் துண்டு துண்டாக வெட்ட வேண்டும். மரண தண்டனையைவிட பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.