Published:Updated:

சாலையில் வீலிங், பைக் ரேஸ்; வாகனங்கள் பறிமுதல்; வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

பைக் ரேஸ்
பைக் ரேஸ் ( representational image )

கடந்த மாதத்தில் மட்டும் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் வார விடுமுறை நாள்களில் அதிக திறன்கொண்ட பைக்குகளில் சாகசங்கள் செய்வதும், ரேஸ் நடத்துவதும் என அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திவருகின்றனர். கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த வெளிவட்ட சாலையில் இளைஞர்களின் இந்த விபரீத விளையாட்டுகளால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. கூட்டம் கூட்டமாக பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள், இந்தச் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வாகன நிறுத்தத்தில் கனரக வாகனங்களை நிறுத்தவிடாமல், இடத்தை ஆக்கிரமித்து அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் சாகசங்கள் செய்துவருகின்றனர்.

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலை
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலை

சேஸிங், வீலிங் என ஆபத்தான வகையில் அட்டகாசம் செய்துவரும் இளைஞர்கள் குறித்து வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவந்தனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக, சோழவரம் போலீஸார் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டுவருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபடுவோரையும், வாகன நிறுத்த இடத்தில் சாகசங்கள் செய்வோரையும் பிடித்து அவர்களது பைக்குகளைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துவருகின்றனர்.

தஞ்சாவூர் : அதிவேக பைக் ரேஸ்; சாலையில் சென்றவர் பரிதாப பலி - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?
பைக் ரேஸ்
பைக் ரேஸ்
representational image

கடந்த மாதத்தில் மட்டும் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் போலீஸார் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் வெளிவட்ட சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோழவரத்தை அடுத்த கும்மனுர் பகுதி அருகே இளைஞர்கள் சிலர் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். கனரக வாகனங்கள் மிகுதியாக ஊர்ந்து செல்லும் அந்தச் சாலையில் வீலிங் செய்தபடியே ஒட்டிவந்த இளைஞர்கள் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

இருப்பினும், போலீஸார் இளைஞர்கள் ஒன்பது பேரை மடக்கிப் பிடித்து அவர்களது விலையுயர்ந்த பைக்குகளைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பிடிபட்ட இளைஞர்கள் சென்னை, திருமுல்லைவாயல், தச்சூர், செங்குன்றம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அனைவருமே 16-லிருந்து 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு