Published:Updated:

கரூர்: `உங்க வீட்டுல குட்கா சோதனை பண்ணணும்!' - மளிகைகடைக்காரர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்

கரூர் ரயில்வே நிலையம்
கரூர் ரயில்வே நிலையம் ( நா.ராஜமுருகன் )

மர்ம நபர்கள் பிரகாஷிடம், 'உங்க வீட்டில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை சட்டவிரோதமாகப் பதுக்கிவைத்து, மளிகைக் கடையில் விற்பனை செய்துவருவதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கு' என்று சொல்லியிருக்கிறார்கள்

``நாங்க கரூர் நகராட்சி அலுவலகத்துலருந்து வர்றோம். நாங்க சிறப்பு அதிகாரிகள். உங்க வீட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பதுக்கிவைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் வந்திருக்கு. அதனால், உங்க வீட்டை நாங்க சோதனை போடணும்" என்று கூறிய இரண்டு பேர், மளிகைக்கடைக்காரரின் வீட்டிலிருந்த ஐந்து பவுன் நகையை திருடிச் சென்று, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 கரூர் பேருந்து நிலையம்
கரூர் பேருந்து நிலையம்
நா.ராஜமுருகன்
24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்!

கரூர் நகரிலுள்ள பாப்பாயி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனது வீட்டையொட்டி இருக்கும் பகுதியில் மளிகைக் கடைவைத்து நடத்திவருகிறார். இவரது கடைக்கு பைக்கில் வந்த 40 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்ம நபர்கள், பிரகாஷிடம், ``நாங்க கரூர் நகராட்சி அலுவலகத்துலருந்து வந்திருக்கிறோம். நாங்க சிறப்பு அதிகாரிகள். உங்க வீட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டவிரோதமாகப் பதுக்கிவைத்து, அதை மளிகைக் கடையில் விற்பனை செய்துவருவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் வந்திருக்கு'’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

கரூர் ரயில்வே நிலையம்
கரூர் ரயில்வே நிலையம்
நா.ராஜமுருகன்

அதைக் கேட்டுப் பதறிய பிரகாஷ், ``உங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள். நான் அப்படி எந்த போதைப்பொருளையும் மறைத்துவைத்து விற்பனை செய்யவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், விடாத அந்த மர்ம நபர்கள், ``எங்களுக்கு உறுதியான தகவல்தான் வந்திருக்கு. உங்க வீட்டை சோதனை போடணும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதைக் கேட்ட பிரகாஷ், ``தாராளமாக சோதனை போட்டுக்கொள்ளுங்கள்’’ என்று அனுமதியளித்திருக்கிறார். முதலில் கடையில் சோதனை போட்டவர்கள், பிறகு வீட்டில் இருந்தவர்களை வெளியில் அனுப்பிவிட்டு, இருவரும் பிரகாஷ் வீட்டிக்குள் சோதனை நடத்துவதுபோல் பாவ்லா காட்டியிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தவர்கள், ``நாங்க வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு வேறு எங்கேயோ போதைப்பொருள்களைப் பதுக்கிவிட்டீர்களா? நாங்க மறுபடியும் சோதனை போட வருவோம்' என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கரூர் நகர காவல் நிலையம்
கரூர் நகர காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

அதன் பிறகு, வீட்டுக்குள் சென்று பார்த்த பிரகாஷ், தனது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுன் நகை மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ந்துபோனார். இது குறித்து, கரூர் நகர காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். அதிகாரிகள்போல் நடித்து, மளிகைகடைக்காரரின் வீட்டிலிருந்த ஐந்து பவுன் நகையை இருவர் திருடிச் சென்ற சம்பவம், அந்தப் பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு