Published:Updated:

சித்து மூஸ்வாலா படுகொலை: நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய ஒத்திகை பார்த்தவர்கள் நேபாளத்தில் கைது!

சல்மான் கான்

நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய மும்பையில் ஒத்திகை பார்த்தவர்கள் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சித்து மூஸ்வாலா படுகொலை: நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய ஒத்திகை பார்த்தவர்கள் நேபாளத்தில் கைது!

நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்ய மும்பையில் ஒத்திகை பார்த்தவர்கள் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
சல்மான் கான்

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் அரசு முக்கியப் பிரமுகர்களுக்கு கொடுத்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்ட அடுத்த சில நாள்களில் இந்தப் படுகொலை சம்பவம் நடந்தது. மூஸ்வாலா படுகொலையில் தொடர்புடைய இரண்டு பேர் பஞ்சாப் எல்லையில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய்தான் சித்து மூஸ்வாலா படுகொலையில் முக்கியக் குற்றவாளி. அவரும் கனடாவில் இருக்கும் கோல்டி பிரர் என்பவரும்தான் இந்தக் கொலைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் லாரன்ஸ் பிஸ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடந்த ஜூன் மாதம் கடிதம் அனுப்பியிருந்தார். சல்மான் கான் மட்டுமல்லாமல் அவரின் வழக்கறிஞர் ஹஸ்திமால் சரஸ்வத் என்பவருக்கும் கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து மும்பை போலீஸார் விசாரித்துவந்தனர்.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

விசாரணையில் இந்த மிரட்டல் கடிதத்தை லாரன்ஸ் பிஸ்னோய் தன்னுடைய கூட்டாளிகள் மூலம் அனுப்பியிருந்தார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பாக நேபாளத்தில் முக்கியக் குற்றவாளி தீபக் முண்டி, கபில் பண்டிட், ராஜிந்தர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கபில் பண்டிட் நடிகர் சல்மான் கானை கொலைசெய்ய ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதை பஞ்சாப் டி.ஜி.பி கௌரவ் யாதவ் தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ``கபில் பண்டிட்டிடம் விசாரணை நடத்தியபோது லாரன்ஸ் பிஸ்னோய் உத்தரவின்பேரில் கபில் பண்டிட், சச்சின் பிஸ்னோய், சந்தோஷ் யாதவ் ஆகியோர் நடிகர் சல்மான் கானைக் கொலைசெய்வதற்கு மும்பையில் ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. மூவரும் மும்பைக்கு சல்மான் கான் தொடர்பான தகவல்களை விசாரிக்கச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மற்றவர்களிடமும் விசாரிக்கவிருக்கிறோம். சல்மான் கானைக் கொலைசெய்ய மூன்று பேரும் சம்பத் நெஹ்ரா என்பவனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருந்தனர். சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய கோல்டி பிரரைக் கைதுசெய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கபில் பண்டிட், ராஜிந்தர் ஆகியோர் சித்து மூஸ்வாலாவைத் துப்பாக்கியால் சுடவில்லை. ஆனால் கொலையில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சல்மான் கான்
சல்மான் கான்

சல்மான் கான் மீது ஏன் கோபம்?

நடிகர் சல்மான் கான் 1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற போது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. சல்மான் கான் வேட்டையாடிய அபூர்வ வகை மான்களை பிஸ்னோய் இன மக்கள் புனிதமாகப் பார்க்கின்றனர். எனவேதான் லாரன்ஸ் பிஸ்னோயை ஒரு முறை ராஜஸ்தான் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு வந்திருந்தபோது `நடிகர் சல்மான் கானைக் கொலை செய்வேன்’ என்று நேரடியாக மிரட்டல் விடுத்திருந்தார். தற்போது அவரிடமிருந்து கடிதம் மூலமும் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து சல்மான் கான் மும்பை போலீஸாரிடம் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். போலீஸார் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக்குத் துப்பாக்கி வாங்கியிருக்கிறார். அவர் பயன்படுத்தும் காரும் குண்டு துளைக்காத கார்!