Published:Updated:

சித்து மூஸ்வாலா கொலையாளிகள்: பாகிஸ்தான் எல்லையில் நடந்த என்கவுன்ட்டரில் பலி!

பாடகர் சித்து மூஸ்வாலா

அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாடகர் சித்து மூஸ்வாலாவை படுகொலைசெய்த இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டனர்.

சித்து மூஸ்வாலா கொலையாளிகள்: பாகிஸ்தான் எல்லையில் நடந்த என்கவுன்ட்டரில் பலி!

அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாடகர் சித்து மூஸ்வாலாவை படுகொலைசெய்த இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டனர்.

Published:Updated:
பாடகர் சித்து மூஸ்வாலா

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் 29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலைக்கு தாங்கள்தான் காரணம் என்று கனடாவிலிருக்கும் கோல்டி பிரர், சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் இருவரும் சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர்.

சித்து மூஸ் வாலா
சித்து மூஸ் வாலா

பஞ்சாப் அரசு வி.ஐ.பி-க்களுக்கு கொடுத்து0வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பிறகுதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த நிலையில், பாடகர் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்களாகக் கருதப்படும் மன்னு குஷா, ஜக்ரூப் சிங் ரூபா ஆகியோர் அமிர்தசரஸ் அருகே அட்டாரி எல்லையிலிருக்கும் பக்னா என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸார் அந்தக் கிராமத்தை முற்றுகையிட்டு சுற்றி வளைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துப்பாக்கிசூடு நடந்த இடம்
துப்பாக்கிசூடு நடந்த இடம்

அந்தக் கிராமத்திலிருக்கும் அனைவரிடமும் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் பதுங்கியிருக்கும் இடத்தில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ரூபா என்பவன் கொலைசெய்யப்பட்டான். போலீஸார் தரப்பில் மூன்று பேர் காயமடைந்தனர். மற்றொரு கொலையாளியான மன்னு குஷா நிலை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு செய்தபோது குஷாவின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது. பாடகர் கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகிறனர்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

இது தவிர கொலை தொடர்பாக 8 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது துப்பாக்கிச்சூட்டில் கொலைசெய்யப்பட்ட இரண்டு பேரும் மோகா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்தே அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அதோடு திகார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாப் அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.