Election bannerElection banner
Published:Updated:

சீர்காழி: கொலையா... தற்கொலையா?; தூக்கில் தொங்கிய சடலம்! - 10 மணி நேரம் நடந்த போராட்டம்

 தற்கொலை
தற்கொலை ( Representational Image )

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீனிவாசனின் மர்ம மரணம் குறித்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சடலத்தை அகற்றவிடாமல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா நெப்பத்தூரில் இயங்கிவருகிறது வட மாநிலத் தொழிலதிபருக்குச் சொந்தமான ஆர்.கே.பி.செங்கல் சூளை. இங்கு பணியாற்றிவரும் கூலித் தொழிலாளியான சீனிவாசன் என்பவர், அந்த நிறுவனத்தின் கூலித்  தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

போராட்டம்
போராட்டம்

கடந்த  10  நாள்களுக்கும்  மேலாக கூலி உயர்வு கேட்டுப் போராடி வந்திருப்பதாகவும், இடையில் சம்பந்தப்பட்ட உரிமையாளர் அவரை எதிர்த்து நிறைய வட மாநிலத் தொழிலாளர்களை இறக்கி வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்தும் வெளி மாநிலத் தொழிலாளர்களைய வெளியேறவ் சொல்லியும் சீனிவாசன் வற்புறுத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், நிர்வாகத்தினர் சீனிவாசனை விடியற்காலை 3 மணிக்கு தொலைபேசியில் பேசி சேம்பருக்கு வருமாறு அழைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவரும்  அங்கு சென்றிருக்கிறார். பிறகு காலை 7 மணிக்கு சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் குடும்பத்தினருக்கு தகவல் வரவே, அவரின் மனைவியும், இரண்டு மகள்களும் பதறி அழுதுகொண்டு  சென்று பார்த்துள்ளனர்.

கூலித் தொழிலாளியான சீனிவாசன் வெறும் ஐந்தடி உயரத்தில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறி அழுத குடும்பத்தினரோடு, பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் இணைந்து போராடின.

தூக்கு தண்டனை குற்றவாளிகள் ஆறு பேர் கருணை மனு நிராகரிப்பு!
தூக்கு தண்டனை குற்றவாளிகள் ஆறு பேர் கருணை மனு நிராகரிப்பு!

இது பற்றி நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுபாஸிடம் பேசினோம். ``அனைத்து இயக்கங்கள், கட்சிகள் மற்றும் குடும்பத்தினரின் கோரிக்கை ஒன்றேதான். அது சம்பந்தப்பட்ட சேம்பர் உரிமையாளரைக் கைதுசெய்ய வேண்டும் என்பதுதான்.

பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் அதை ஏற்கவே இல்லை. காலை 3 மணிக்கு தூக்கிட்டு தொங்கவிடப்பட்ட  உடல் மாலை 6 மணிவரை தீர்வில்லாமல் தொங்கியது. திட்டமிட்ட கொலை என்ற பிரிவில் வழக்கு பதியச் சொன்னாலும் அதுவும் முடியாது எனக் காவல்துறை தரப்பில் மறுத்தனர்.

ஏற்கெனவே இதே மாதிரி செங்கல் சூலையில் நான்கு கூலித் தொழிலாளிகள் இறந்துள்ளனர். இவர் ஐந்தாம் நபர்" என்றார்.

தற்போது செங்கல் சூலை உரிமையாளர் சுரேஷ் சந்தி, அவர் மகன் சித்தார்த் மற்றும் இரவு நேரக் காவலாளி மோகன்ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீது  தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு