Published:Updated:

சிவகங்கை: `யாருக்கும் பாரமாக இருக்கப்போவதில்லை!'- விபரீத முடிவு எடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை

அரசுப்பள்ளி ஆசிரியை
அரசுப்பள்ளி ஆசிரியை

காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் ஆசிரியை புவனேஸ்வரியின் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதிகளுக்குள் தேடியபோது, அங்கு இருந்த ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் காண்டீபன். இவர் தீயணைப்புத் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (32). தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அதோடு, புவனேஸ்வரி தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். இந்தநிலையில் தான், ``இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி. இனிமேல் நான் யாருக்கும் பாரமாக இருக்கப்போவதில்லை" என்று புவனேஸ்வரி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Representational Image
Representational Image

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்த்த அவரது மாணவி ஒருவர், இதுகுறித்து புவனேஸ்வரியின் கணவர் காண்டீபனிடம் கூறியுள்ளார். இதையடுத்து காண்டீபன், புவனேஸ்வரியை போனில் பலமுறை தொடர்புகொண்டும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. நீண்ட நேரமாக வீட்டுக்கும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த, காண்டீபன் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்த தகவலைத் தெரிவித்து மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் புவனேஸ்வரியின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

இந்தியாவில் அதிக தற்கொலை...   இரண்டாம் இடத்தில் தமிழகம்! - NCRB அறிக்கை சொல்வதென்ன?

ஆனாலும், ரிங் அடித்துக் கொண்டே இருந்தநிலையில், அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து, செல்போன் டவர் மூலம் செல்போன் இருக்கும் இடத்தைப் போலீஸார் டிராக் செய்தனர். காரைக்குடி - திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு இடத்தைக் காட்டியுள்ளது. உடனே அந்த இடத்துக்குக் காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று பார்த்தனர். காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் ஆசிரியை புவனேஸ்வரியின் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதிகளுக்குள் தேடியபோது, அங்கு இருந்த ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி
அரசுப் பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி

இதையடுத்து, உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காகக் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை தற்கொலை செய்துகொண்டாரா, இல்லை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாகத் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு