Published:Updated:

`இளைஞர் கொலை; ரயிலில் எஸ்கேப்!' - காதலியுடன் ஆட்டோ டிரைவரை வளைத்த சிவகங்கை போலீஸ்

அஷ்டலட்சுமி - லிங்கபாண்டி
அஷ்டலட்சுமி - லிங்கபாண்டி

அங்கிருந்து ரயில் மூலம் பெங்களூரு தப்பிச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்ததைக் கண்டுபிடித்த போலீஸார், அவர்களை ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தமறாக்கி பகுதியைச் சேர்ந்தவர் போதுராஜ். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த அவர், கடந்த 6 மாதத்துக்கு முன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்தநிலையில், சிவகங்கை சஞ்சய் நகரில் போதுராஜ், கடந்த 10-ம் தேதி சடலமாகக் கிடந்தார். அவரது சடலம் அழுகிய நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

லிங்கபாண்டி
லிங்கபாண்டி

விசாரணையில் கூடாநட்பால் போதுராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``போதுராஜ், வெளிநாடு செல்லும் முன்பாக அஷ்டலட்சுமி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். அஷ்டலட்சுமிக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. போதுராஜ் வெளிநாடு சென்றிருந்தநிலையில், அஷ்டலட்சுமிக்கு அப்பகுதியைச் சேர்ந்த லிங்கப்பாண்டி என்கிற ஆட்டோ டிரைவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சஞ்சய் நகரில் லிங்கபாண்டியுடன் வசித்த அஷ்டலட்சுமியை இரவு நேரத்தில் போதுராஜ் பார்க்கச் சென்றுள்ளார். அஷ்டலட்சுமியுடன் போதுராஜ் இருப்பதைப் பார்த்த லிங்கபாண்டி இருவரையும் சத்தம் போட்டுள்ளார். அப்போது, அஷ்டலட்சுமி, `இவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை இவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்' என லிங்கப்பாண்டியிடம் கூறியிருக்கிறார்.

அஷ்டலட்சுமி
அஷ்டலட்சுமி

போதுராஜைக் கொலை செய்த பின்னர் அவர்கள் இரண்டு பேரும் டூவீலர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து ரயில் மூலம் பெங்களூரு தப்பிச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்ததைக் கண்டுபிடித்த போலீஸார், அவர்களைக் கைது செய்ய சென்னை விரைந்தனர். அப்போது அவர்கள் ரயிலில் செல்வது தெரிந்து, ரயிலைத் துரத்திச் சென்று ரயில்வே போலீஸார் உதவியுடன் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் வைத்து கைது செய்தனர். தற்போது, அஷ்டலட்சுமி, லிங்கபாண்டி மீது காவல்துறையினர் கொலைவழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போதுராஜை தாங்கள் கொலை செய்யவில்லை என்று அவர்கள் இருவரும் காவல்துறையினரிடம் தொடர்ந்து கூறிவருவதாகச் சொல்கிறார்கள்.

இவர்கள்தான் போதுராஜை கொலை செய்தார்களா இல்லை இந்தக் கொலையில் வேறு யாருக்கும் சம்பந்தம் உண்டா என சிசிடிவி காட்சி மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திலும் காவல்துறையினர் விசாரணையைப் பலப்படுத்தியுள்ளனர். எனினும், முழு விசாரணைக்குப் பின்புதான் உண்மை வெளிவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் குற்றச் சம்பவங்கள் குறைந்து அமைதியாக இருந்தது. இந்நிலையில் சஞ்சை நகரில் நடைபெற்ற மர்ம கொலையால் சிவகங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லிங்க பாண்டி
லிங்க பாண்டி

இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம், `அஷ்டலட்சுமி மற்றும் லிங்கபாண்டி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறோம். ஆனால், சத்தியமாக நாங்கள் கொலை செய்யவில்லை அது தற்கொலை என்று தங்கள் கருத்தில் உறுதியாக உள்ளனர். இருவரும் பார்க்க காமடி பீஸ்போல தெரிவதால், இந்த வழக்கில் கூடுதல் விசாரணைகள் செய்கிறோம். எனவே, கொலையை யார்தான் செய்தது என்று பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு