Published:Updated:

அரசு ஊழியர், தந்தை, தொழிலாளி கொலை! - சிவகங்கையில் ஒரே நாளில் நடந்த கொடுமை

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் கிராம உதவியாளர் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

மொட்டை மாடியில் நடந்த கொலை
மொட்டை மாடியில் நடந்த கொலை

சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட இடங்களில் கொலைகள் அதிகமாக நடந்துவருகின்றன. இதனால் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மொட்டை மாடியில் கிடந்த சடலம்; சந்தேக வளையத்தில் மனைவி; சகோதரி! - காரைக்குடியைப் பதறவைத்த கொலை

இந்த நிலையில், நேற்று மட்டும் வெவ்வேறு சம்பவங்களில் கிராம உதவியாளர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடி அடுத்த பெத்தனேந்தல் என்ற கிராமத்தில் வீராசாமி என்பவர் தன் தந்தையைக் கொலை செய்துள்ளார்.

ரெளடி ராஜசேகர் கொலை
ரெளடி ராஜசேகர் கொலை

அதேபோல் திருப்புவனத்தை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த கணேச பாண்டியன் என்ற டைல்ஸ் பிட்டிங் தொழிலாளி பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டுள்ளார். தேவகோட்டை திருவேகம்பத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றிய ராதாகிருஷ்ணன் என்ற கிராம உதவியாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மட்டும் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம உதவியாளர்
கிராம உதவியாளர்

காவல்துறை தரப்பில் இது குறித்து கேட்டபோது,``சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தொழில்வளம் என்பது மிகக்குறைவுதான். இதனால் வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும், தவறான வழிக்குப் போகும் இளைஞர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் ஓரளவுக்கு கொலைகள் குறைய வாய்ப்பு உள்ளது'' என்றனர்.