Published:Updated:

`நிம்மதியே போச்சு; அதனால் திரும்ப வச்சுட்டோம்!' - சிவகங்கை சிலை திருடர்கள் வாக்குமூலம்

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

சிவகங்கை அருகே கோயில் சிலை திருட்டு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

கரியமாணிக்க பெருமாள்
கரியமாணிக்க பெருமாள்

சிவகங்கை அருகே கோயில் சிலையைத் திருடியதால் நிம்மதியை இழந்த திருடர்கள், அந்தச் சிலையை மீண்டும் கோயிலில் வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கரியமாணிக்க பெருமாள்
கரியமாணிக்க பெருமாள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள 'கரியமாணிக்க பெருமாள்' கோயிலில் கடந்த ஜூன் 17-ம் தேதி பெருமாள் உட்பட மூன்று உற்சவர் சிலைகள் திருடு போயின.

தடயவியல், காவல்துறையினர், இந்து அறநிலையத்துறையினர் கோயில் சிலை தொடர்பாக ஆய்வு செய்தனர். ஆனால், காணாமல் போன சிலைகள் கிடைக்கவில்லை. மானாமதுரை காவல்துறை டி.எஸ்.பி., கார்த்திகேயன் விரைவில் சிலை கண்டுபிடிக்கப்படும் எனத் தகவல் தெரிவித்திருந்தார்.

கரியமாணிக்க பெருமாள்
கரியமாணிக்க பெருமாள்
சாய்தர்மராஜ்

இந்நிலையில் கடந்த 26ம் தேதி தொலைந்த 3 சிலைகளையும் திருடர்கள் கோயிலில் வைத்துவிட்டு சென்றனர். சிலை கிடைத்த போதும் திருடர்கள் யார் என்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் இது குறித்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் அடிப்பையில் தெய்வமணி, சுந்தரவேல், சுப்பு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் மற்றும் பொன்னுப்பாண்டி ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கரியமாணிக்க பெருமாள்
கரியமாணிக்க பெருமாள்

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, சிலையைத் திருடியதாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். போலீஸில் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், ``சிலையைத் திருடிய நாளில் இருந்து போலீஸார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தோம். இப்படி இருந்ததால், வீட்டில் நிம்மதியை இழந்தோம். இதனால், கோயில் சிலையை மீண்டும் வைத்துவிடலாம் என்று திருப்பி வைத்துவிட்டோம்'' என அவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.