Published:Updated:

சிவகாசி ஜெயலட்சுமி தர்ணா: ரூ.3.75 கோடி பணம்; திருச்சி எல்பின் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு!

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

முதலில் மளிகைப்பொருள்களில் தொடங்கியவர்கள், நாளடைவில் வீடு கட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி விற்பது போன்ற ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில்களையும் செய்துவந்தனர்.

திருச்சியில் செயல்பட்டுவரும் எல்பின் நிதி நிறுவனம் தன்னிடம் பெற்ற 3.75 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக, சிவகாசி ஜெயலட்சுமி எல்பின் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்பின்
எல்பின்

உயரதிகாரிகள் முதல் போலீஸ் ஏட்டுகள் வரை பாலியல் குற்றச்சாட்டைக் கூறி 20 வருடங்களுக்கு முன் பரபரப்பைக் கிளப்பியவர் சிவகாசி ஜெயலட்சுமி. அவர், இன்று திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டுவரும் எல்பின் நிதி நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து சிவகாசி ஜெயலட்சுமி பேசுகையில், ``சில வருடங்களுக்கு முன் எல்பின் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திச் சேர்ந்தேன். அதன் பிறகு இதுவரை நூற்றுக்கணக்கானவர்களை இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்துள்ளேன். நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 3.75 கோடி ரூபாய் பெற்றுத் தந்திருக்கிறேன்.

ஜெயலட்சுமி முற்றுகை
ஜெயலட்சுமி முற்றுகை

செலுத்திய பணம் இரண்டு வருடங்களில் முதிர்வடைந்துவிட்டது. ஆனால், கடந்த ஒரு வருடமாக யாருக்கும் முதிர்வு தொகையைத் திருப்பித் தரவில்லை. மேலும், அவர்கள் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. பலமுறை பணம் கேட்டுப் பார்த்தேன். கொடுத்தபாடில்லை. வேறு வழியில்லாமல்தான் அவர்களது அலுவலகத்தின் முன்பு போராட்டத்தை நடத்துகிறேன். எனது பணத்தை வாங்காமல் இந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல மாட்டேன்” என்றார் ஆவேசமாக.

எல்பின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முருகன் என்பவரிடம் பேசினோம். ``திருச்சியை மையமாகக்கொண்டு செயல்படுகிறது எல்பின் நிறுவனம். இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர்கள் ராஜாவும், அவரின் தம்பி ரமேஷும். இந்த நிறுவனத்தில் எம்.எல்.எம் போன்று ஆட்களைப் பிடிப்பார்கள். அதைத் தொடர்ந்து, இவர்களின் பெயரில் பொருள்களை உருவாக்கி, அவற்றை அவர்களையே விற்கச் சொல்லி ஆட்களைப் பிடிப்பார்கள்.

எல்பின் நிதி நிறுவனம்
எல்பின் நிதி நிறுவனம்

அதை ஒவ்வொருவரும் தொடர்ந்து செய்யும்போது அதிலுள்ள நபர்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள். முதலில் மளிகைப்பொருள்களில் தொடங்கியவர்கள் நாளடைவில் வீடு கட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி விற்பது போன்ற ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில்களையும் செய்துவந்தனர். ஆரம்பத்தில் நிறைய பேர் இவர்களை நம்பிச் சேர்ந்தனர். பிறகு அதிகமாகச் சேர்ந்ததும், 'அறம் மக்கள் நலசங்கம்' என்று ஆரம்பித்தனர். அத்துடன், மக்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றத் தொடங்கினார்கள். அதன் விளைவுதான் தற்போது அடுத்தடுத்த புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

இவர்கள் மீது பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அப்படித்தான் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புகூட மிதுன் சமேஸ் என்பவரிடம் 2 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருக்கிறார்கள். அவர் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. காரணம், அண்ணன் ராஜா பா.ஜ.க-வில் இருக்கிறார். அவரின் தம்பி ரமேஷ் விடுதலைச் சிறுத்தை கட்சியில் இருப்பதால் இவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதே சாமான்ய மனிதன் ஒருவர் ஏமாற்றிவிட்டால் அவர் மீது போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இவர்களைப் போன்றோர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்று ஆவேசப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு