Published:Updated:

விபரீதத்தில் முடிந்த திருமணம் மீறிய உறவு; வாலிபரைக் கொலைசெய்த ஆறு பேர் கைது! - என்ன நடந்தது?

கொலை

ரோஜா தனது உறவினர்களுடன் இணைந்து மஞ்சுநாத் பல்லப்பாவை கொலைசெய்ததை கண்டறிந்த போலீஸார், சம்பவம் தொடர்பாக இன்று, ஆறு பேரை கைதுசெய்து, தலைமறைவாக உள்ள சரோஜாவை தேடி வருகின்றனர்.

விபரீதத்தில் முடிந்த திருமணம் மீறிய உறவு; வாலிபரைக் கொலைசெய்த ஆறு பேர் கைது! - என்ன நடந்தது?

ரோஜா தனது உறவினர்களுடன் இணைந்து மஞ்சுநாத் பல்லப்பாவை கொலைசெய்ததை கண்டறிந்த போலீஸார், சம்பவம் தொடர்பாக இன்று, ஆறு பேரை கைதுசெய்து, தலைமறைவாக உள்ள சரோஜாவை தேடி வருகின்றனர்.

Published:Updated:
கொலை

கர்நாடக மாநிலம், பெங்களூரில், கேபி அக்ரஹாரா பகுதியில் கடந்த, 4-ம் தேதி அதிகாலையில், தெருவில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் சேர்ந்த கும்பல், அந்த வாலிபரை கற்களைக்கொண்டு தாக்கி கொடூரமாக கொலைசெய்து தப்பியோடும், அதிர்ச்சிகர வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன போலீஸார், விசாரணையை துவங்கினர்.

குற்றவாளிகள்.
குற்றவாளிகள்.

விசாரணை மேற்கொண்டதில் இறந்தது பகால்கோட் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் பல்லப்பா (21) என்பதும், இவர் அதே பகுதியை சேர்ந்த சரோஜா (37) என்ற பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததும் தெரியவந்தது. சரோஜா தனது உறவினர்களுடன் இணைந்து மஞ்சுநாத் பல்லப்பாவை கொலைசெய்ததை கண்டறிந்த போலீஸார், சம்பவம் தொடர்பாக இன்று, ஆறு பேரை கைதுசெய்து, தலைமறைவாக உள்ள சரோஜாவை தேடி வருகின்றனர்.

இது குறித்து பெங்களூர் மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நம்பகிரி, ‘‘சம்பவ இடத்தில் மஞ்சுநாத் முகம் முற்றிலுமாக சிதைந்து கிடந்ததால், அவரை கண்டறிய முடியவில்லை. இறப்பதற்கு முன்பு அருகிலுள்ள மெடிக்கல் ஷாப்பில் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக கொடுத்துள்ளார். அவரது செல்போன் கிடைத்ததும் அதை வைத்து இறந்தது மஞ்சுநாத் எனக்கண்டறிந்தோம்.

குற்றவாளிகள்.
குற்றவாளிகள்.

சரோஜாவுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவர் துபாயில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள மஞ்சுநாத் பல்லப்பாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார். மஞ்சுநாத் அடிக்கடி சரோஜாவிடம் பணம் கேட்டு தொல்லை செய்ததுடன், தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படம், வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். மஞ்சுநாத் மீது இரண்டு முறை போலீஸ் புகார் கொடுத்துள்ள சரோஜா, கடந்த வாரம் பெங்களூரு கேபி அக்ரஹாரா பகுதியிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு வந்து தங்கி, உறவினர்களிடம் நடந்ததை கூறினார்.

சரோஜா வந்ததை அறிந்து பெங்களூரு வந்த மஞ்சுநாத், உறவினர்கள் முன்னிலையில் சரோஜாவை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரோஜா மற்றும் உறவினர்கள், அவருடன் வாக்குவாதம் செய்து பின் ஆத்திரத்தில் ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து பலமுறை அவரின் தலையில் தாக்கி கொலைசெய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட ­­ பிரேமாவா, அக்கா மகாதேவி, கிரன், சன்னப்பா, மஞ்சுநாத், காசிநாத் ஆகிய ஆறு பேரை கைதுசெய்திருக்கிறோம், தலைமறைவாக உள்ள சரோஜாவை தேடி வருகிறோம்’’ என்றார்.