Published:Updated:

திருச்சி: பூங்காவில் மண்டை ஓடுகள், மனித எலும்புகள்! - பதறிய சிறுவர்கள்; போலீஸ் விசாரணை

மண்டை ஓடுகள்
மண்டை ஓடுகள்

சுடுகாட்டில் தோண்டியெடுத்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா... இல்லை மந்திரவாதிகள் யாரேனும் பில்லி, சூனியம், மாந்திரீக வேலைகளைச் செய்துவிட்டுப் போட்டார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி பூங்கா அருகே மண்டை ஓடுகள், இரண்டு சாக்கு மூட்டைகளில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எலும்புகள் மாந்திரீகம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டவையா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

மண்டை ஓடுகள்
மண்டை ஓடுகள்

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பொழுதுபோக்கும்விதமாகப் பசுமை பூங்காக்கள் உள்ளன. ஏற்கெனவே உள்ள பூங்காக்களில் புதர்மண்டிக்கிடக்கும் பூங்காக்களைச் சுத்தப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்தப் பூங்காக்களில் முதியோர் முதல் குழந்தைகள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்க்ள்; அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்கிறார்கள்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே பூங்கா ஒன்று இருக்கிறது. இந்தப் பூங்காவின் அருகேயுள்ள முட்புதரில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் இரண்டு மூட்டைகளில் கட்டப்பட்டு சந்தேகத்துக்கிடமான முறையில் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

முட்புதர்
முட்புதர்

அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்ததில், ஒன்பது மனித மண்டை ஓடுகள், இரண்டு மூட்டைகளில் மனித எலும்புகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த எலும்புகள் எப்படி வந்தன என்று போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். அதேபோல் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியிலும் இதே போன்ற எலும்புகள் கிடந்ததாக, அந்தச் சம்பவத்தையும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் விசாரித்தோம்.``இந்தப் பகுதியில் புதர்மண்டிக்கிடப்பதால் பொதுமக்கள் இந்தப் பகுதிக்குச் அதிகம் வர மாட்டார்கள். இரு மூட்டைகளில் மண்டை ஓடுகள், பிரிக்கப்படாமல் இருந்தன. அவற்றைச் சுற்றி மனித எலும்புகள் கிடந்தன. அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் அவற்றை முதலில் பார்த்தது. அவர்கள் அதிர்ந்துபோய் பெற்றோர்களிடம் சொல்ல, அவர்கள்தான் போலீஸாருக்குத் தகவல் அளித்தார்கள். போலீஸாரும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மண்டை ஓடுகள்
மண்டை ஓடுகள்

இத்தனை மனித மண்டை ஓடுகள் இங்கு எப்படி வந்தன... சுடுகாட்டில் தோண்டியெடுத்து இங்கு கொண்டுவந்து போட்டார்களா... இல்லை மந்திரவாதிகள் யாரேனும் பில்லி, சூனியம், மாந்திரீக வேலைகளைச் செய்துவிட்டு இங்கு வந்து போட்டார்களா... அல்லது யாராவது கொலை செய்துவிட்டு மூட்டையாகக் கட்டி எலும்புக்கூடுகளை இங்கு வீசிச் சென்றார்களா என்று பல சந்தேகங்கள் எங்களுக்குள் எழுகின்றன. போலீஸார் விசாரித்தால்தான் முழுமையாகத் தெரியவரும்" என்றனர்,

தஞ்சாவூர்: குப்பையில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள்! - அதிர்ச்சியில் உறைந்த  பொதுமக்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு