Published:Updated:

சென்னை: 4 வயது பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை... போலீஸ் விசாரணை!

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்த பத்தாவது நாளில் 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்திருக்கிறது.

சென்னை: 4 வயது பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை... போலீஸ் விசாரணை!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்த பத்தாவது நாளில் 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்திருக்கிறது.

Published:Updated:
பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை

சென்னை மதுரவாயல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 4 வயது மகளை அவரின் பெற்றோர் சேர்த்தனர். பள்ளிக்குச் சென்று வந்த 4 வயது சிறுமி ஒருநாள் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது அதே பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், தன்னை தனியாக அழைத்துச் சென்று அடித்ததாக மழலை மொழியில் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்தச் சிறுமி தன்னுடைய அந்தரங்க உறுப்பில் வலிப்பதாகவும் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த 4 வயது சிறுமியின் பெற்றோர், விபரீதத்தை உணர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர்.

பாலியல் புகார்
பாலியல் புகார்

ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமோ எதையும் கண்டுக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. அதோடு, ``உங்கள் மகள் பள்ளிக்குச் சேர்ந்து பத்து நாள்களே ஆகின்றன. அதற்குள் இப்படியொரு புகாரளிக்கிறீர்கள். எனவே நீங்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் சிறுமியின் பெற்றோரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதோடு சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் பாலியல் தொல்லைக்குள்ளானது தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து இந்த புகார் மதுரவாயல் காவல் நிலையத்திலிருந்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது சிறுமியிடமும் அவரின் பெற்றோரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெற்றோர் குற்றம்சாட்டும் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது எந்த மாணவன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நான்கு வயது சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, அடையாளம் காட்டும் மாணவனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்பிறகுதான் என்ன நடந்தது எனத் தெரியவரும்."