Published:Updated:

தமிழ்நாடு டு இலங்கை... 20 நாள்களில் 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இலங்கை கடற்படை!

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட கஞ்சா

ராமேஸ்வரத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கிலோ கணக்கில் கடத்தப்படும் நிலையில், கடத்தல் மாஃபியாகளுக்கு போலீஸார் சிலர் உடந்தையாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

தமிழ்நாடு டு இலங்கை... 20 நாள்களில் 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கிலோ கணக்கில் கடத்தப்படும் நிலையில், கடத்தல் மாஃபியாகளுக்கு போலீஸார் சிலர் உடந்தையாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட கஞ்சா

`தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்ய வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகள், சட்ட விரோத சொத்துகளை முடக்க வேண்டும்' என டி.ஜி.பி உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து கஞ்சா கடத்தல், விற்பனை அமோகமாக நடந்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

ரோந்துப் பணியில் ஹோவர் கிராஃப்ட் கப்பல்
ரோந்துப் பணியில் ஹோவர் கிராஃப்ட் கப்பல்

இப்படியான சூழலில் ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 நாட்டிக்கல் தொலைவிலேயே இலங்கை இருப்பதால், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள், தங்கம் போன்றவை இலங்கைக்குக் கடல் மார்க்கமாகக் கடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரத்துக்கு வருகை தந்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சிவகங்கை, ராமநாதபுரம் போலீஸ் உயரதிகாரிகள், தமிழ்நாடு கடலோரக் காவல்படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தல் நடப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுச் சென்றார். ஆனால், போலீஸார் கடத்தல்காரர்களுக்குத் துணையாகச் செயல்பட்டுவருவதாக மீனவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் சூழலில், கடந்த 20 நாள்களில் மட்டும் இலங்கை கடற்படை மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய 1,200 கிலோ கஞ்சா மற்றும் 1,600 கிலோ பீடி இலையைக் கைப்பற்றி கடத்தல்காரர்களைக் கைதுசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலோர காவல் நிலையத்தில் பணியாற்றும் உயரதிகாரிகளின் துணையோடு, கடத்தல்காரர்கள் மிகத் துல்லியமாக தங்களுடைய கடத்தல் சம்பவங்களை திட்டமிட்டு கஞ்சாவைக் கடத்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் உள்ளன.

இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்ட கேரள கஞ்சா
இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்ட கேரள கஞ்சா

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மர்மப் படகுகள் மூலம் கஞ்சா, தடை செய்யப்பட்ட பொருள்களைக் கடத்திச் சென்று, பின்னர் அங்கிருந்து மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் கஞ்சா முழுவதும் கேரளப் பகுதியிலுள்ள கஞ்சா என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கஞ்சா தடிமன் குறைவாகவும், கேரளாவில் விளைவிக்கப்படும் கஞ்சா தடிமன் அதிகமாகவும் இருக்கும் என்பதால் அதை வைத்து இது கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா என்று இலங்கை கடற்படையினர் உறுதி செய்திருக்கின்றனர். கேரளாவிலிருந்து தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்குக் கஞ்சா எப்படி வருகிறது என்பது குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

கடத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்
கடத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கடலோர காவல் படை, இந்தியக் கடற்படையினர் அதி நவீன படகுகளிலும், நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர் கிராஃப்ட் என்று அழைக்கக்கூடிய மத்திய ரோந்து கப்பல்கள் மூலம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருந்தும் கடத்தல்காரர்கள் இத்தகைய குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து விவரமறிந்த போலீஸாரிடம் விசாரித்தோம். ``ஏற்கெனவே இதே போன்று கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்திருக்கிறோம், தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். டி.ஜி.பி-யின் அறிவுறுத்தலின்படி கஞ்சா வேட்டை தொடர்ந்துவருகிறது. இதில் கடத்தல் பேர்வழிகளுக்கு உடந்தையாகச் சில போலீஸார் செயல்பட்டுவருவதாகக் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை" எனத் தெரிவித்தனர்.

ரோந்துப் பணியில் கடலோர காவல் படை
ரோந்துப் பணியில் கடலோர காவல் படை

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திவரும் மாஃபியாக்களை விரைந்து கைதுசெய்வதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு உறுதுணையாக அதிகாரிகள் இருந்தால், அதைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.