Published:Updated:

``முதலீடு செய்யுங்கள்... இரட்டிப்பாகத் தருகிறேன்" - ரூ.20 கோடி மோசடி செய்த இன்ஜினீயர் கைது

மோசடி வழக்கில் - இன்ஜினீயர் கைது

பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாக, பலரிடம் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

``முதலீடு செய்யுங்கள்... இரட்டிப்பாகத் தருகிறேன்" - ரூ.20 கோடி மோசடி செய்த இன்ஜினீயர் கைது

பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாக, பலரிடம் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
மோசடி வழக்கில் - இன்ஜினீயர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், சி.ஏ படித்துவருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு வேங்கைவாசல், மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பாலாஜி, சர்வபொம்மனிடம் தான் சி.ஏ முடித்து, பங்குச் சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்துவருவதாகக் கூறியிருக்கிறார். தன்னிடம் பணம் கொடுத்தால், அந்தப் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியிருக்கிறார்.

சேலையூர் காவல் நிலையம்
சேலையூர் காவல் நிலையம்

இந்த ஆசைவார்த்தையில் மயங்கிய சர்வபொம்மன் அவரிடம் 70 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கி நீண்டநாள் ஆகியும் திரும்பத் தராமல் பாலாஜி ஏமாற்றிவந்திருக்கிறார். இதையடுத்து, சர்வபொம்மன் கடந்த ஏப்ரல் மாதம் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விசாரணையில், பாலாஜி தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூருக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருக்கு விரைந்த போலீஸார் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவருவது தெரியவந்தது. மேலும், தற்போது நண்பர்களுடன் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது.

பிரசன்ன வெங்கடேச பாலாஜி
பிரசன்ன வெங்கடேச பாலாஜி

இதையடுத்து, கேரளாவிலிருந்து கோவைக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்த பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரை போலீஸார் சேலையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பாலாஜி, பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாகப் பலரிடமும் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து இரண்டு விலையுயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.