Published:Updated:

மக்களவை சபாநாயகர் பெயரில் போலி வாட்ஸ்அப் - சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெயரில் போலி வாட்ஸ்அப்

சில குற்றவாளிகள், தம்முடைய பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் பெயரில் போலி வாட்ஸ்அப் - சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது

சில குற்றவாளிகள், தம்முடைய பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார்.

Published:Updated:
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெயரில் போலி வாட்ஸ்அப்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சில குற்றவாளிகள் தம்முடைய பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியதையடுத்து, சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடைய மூன்று பேரை ஒடிசா போலீஸ் கைதுசெய்துள்ளது.

இது தொடர்பாக ஓம் பிர்லா, ``சில குற்றவாளிகள் என் பெயரில், என் புகைப்படத்துடன்கூடிய போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்கள் மற்றும் பிறருக்கு 7862092008, 9480918183 9439073870 ஆகிய எண்களிலிருந்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் மற்றும் பிற எண்களிலிருந்து வரும் அழைப்புகள், மெசேஜ்களை புறக்கணித்துவிட்டு, இது குறித்து எனது அலுவலகத்துக்குத் தெரிவிக்கவும்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒடிசா போலீஸாரால், இதில் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட மூன்று பேர் சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள், `கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும், ஏற்கெனவே ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டுகளை, ஒரு கும்பலுக்கு விற்றுவிட்டு, பொதுத்தளத்தில் இருக்கக்கூடிய ஓம் பிர்லாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அதிலிருந்து போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டிருந்தார்கள்' எனக் கூறுகின்றன.

இதேபோல் கடந்த மாதம், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவைப்போல் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து, சில வி.ஐ.பி-க்கள் உட்பட பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்ச்த சம்பவம் தொடர்பாக, அப்போதே உள்துறை அமைச்சகத்துக்கு, வெங்கைய நாயுடு அலுவலகத்திலிருந்து இது குறித்து பேசி எச்சரிக்கையாக இருக்கும்படி கூறப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism