Published:Updated:

தாராபுரம்: பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மகனும், காப்பாற்ற முயன்ற தாயும் மூழ்கி பலியான சோகம்!

பண்ணைக் குட்டை

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விவசாய தோட்டத்திலுள்ள பண்ணைக் குட்டையில் மூழ்கி மகனும், அவரைக் காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தாராபுரம்: பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மகனும், காப்பாற்ற முயன்ற தாயும் மூழ்கி பலியான சோகம்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விவசாய தோட்டத்திலுள்ள பண்ணைக் குட்டையில் மூழ்கி மகனும், அவரைக் காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Published:Updated:
பண்ணைக் குட்டை

தாராபுரத்தை அடுத்த சின்னபுத்தூர் மைனர் காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி, சக்திவேல் (36). இவரின் மனைவி சந்திரகலா (30). இவர்களின் மகன் வினோதர்ஷன் (8), 3-ம் வகுப்பு படித்து வந்தாா். சக்திவேலு தன் தோட்டத்தில் சோளம் சாகுபடி செய்திருக்கிறார். பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு 12 அடி ஆழமுள்ள செயற்கை பண்ணைக் குட்டையையும் அமைத்திருக்கிறார்.

சந்திரகலா, வினோதர்ஷன்
சந்திரகலா, வினோதர்ஷன்

இந்தக் குட்டை எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும். சோளப் பயிருக்குத் தண்ணீர் தேவைப்படும்போது குட்டையிலிருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில் சோளத்தட்டைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சக்திவேல், சந்திரகலாவின் மகன் வினோதர்ஷன் ஆகியோர் தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர்.

பண்ணைக் குட்டையில் தண்ணீர் நிரம்பியதைத் தொடர்ந்து குட்டையின் அருகே இருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சந்திரகலாவும்ம் வினோதர்ஷனும் சென்றுள்ளனர்.

அப்போது வினோதர்ஷன் கால்தவறி குட்டையில் விழுந்திருக்கிறார். இதைப் பார்த்த சந்திரகலா மகனைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் குட்டையில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் குட்டையின் கரைப்பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் கவரைப் பிடித்துவிடலாம் என்று நீண்ட நேரம் முயன்றிருக்கின்றனர்.

மரணம்
மரணம்

ஆனால் அவர்களால் முடியாத நிலையில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். மோட்டாரை நிறுத்துவதற்காகச் சென்ற மனைவியையும் மகனையும் காணவில்லையே என்று சக்திவேல் குட்டைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அப்போது தாய், மகன் இருவரும் குட்டையில் மூழ்கிக்கிடந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் குட்டையிலிருந்து மேலே கொண்டு வந்தனர். அப்போது சந்திரகலா இறந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வினோதர்ஷனை தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி வினோதர்ஷனும் உயிரிழந்தார். இது குறித்து தாராபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.