Published:Updated:

தஞ்சாவூர்: குடி போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை... தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலைசெய்த மகன்

தந்தையைக் கொலைசெய்த மகன்

தஞ்சாவூர் அருகே மது போதையில் தாயிடம் தொடர்ந்து சண்டை போட்டதால் ஆத்திரமடைந்த மகன், தந்தையின் தலையில் அம்மிக்குழவிக்கல்லைப் போட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: குடி போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை... தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலைசெய்த மகன்

தஞ்சாவூர் அருகே மது போதையில் தாயிடம் தொடர்ந்து சண்டை போட்டதால் ஆத்திரமடைந்த மகன், தந்தையின் தலையில் அம்மிக்குழவிக்கல்லைப் போட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தந்தையைக் கொலைசெய்த மகன்

தஞ்சாவூர், சூரக்கோட்டை அருகேயுள்ள அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (55). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி அமுதா. இவர்களின் மகன் சின்னத்துரை (24). கரூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார்.

கொலைசெய்யபட்ட தந்தை
கொலைசெய்யபட்ட தந்தை

சின்னதம்பி கூலிவேலை செய்வதன் மூலம் கிடைக்கும் சம்பளப் பணத்தை, தன் மனைவியிடம் கொடுப்பதில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், அந்தப் பணத்தில் தினமும் மது குடித்துவிட்டு போதையில் மனைவியிடம் சண்டைபோட்டுவந்திருக்கிறார். தொடர்ச்சியாக இதுபோல் சின்னதம்பி செய்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரூரிலில் வேலை பார்த்துவந்த சின்னத்துரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். அப்போதும் சின்னதம்பி தன் மனைவியிடம் போதையில் தகராறு செய்திருக்கிறார். `எப்ப பார்த்தாலும் இது மாதிரி செய்யுறியேப்பா?’ என்று கேட்டு, சின்னத்துரை தன் அப்பாவைக் கண்டித்திருக்கிறார்.

கொலை
கொலை

இந்த நிலையில் மீண்டும் குடித்துவிட்டு வந்து வீட்டில் சின்னத்தம்பி தகராறு செய்ததால் சின்னத்துரை ஆத்திரமடைந்திருக்கிறார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவருக்குமான சண்டையை விலக்கிவிட்டிருக்கின்றனர்.

தந்தை, இப்படித் தொடர்ந்து குடிப்பதும், தகராறு செய்வதுமாக இருக்கிறார். இதனால் எல்லாருடைய நிம்மதியும் கெட்டு போகிறது என சின்னதுரை எல்லோரிடத்திலும் புலம்பியிருக்கிறார். இந்த நிலையில் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை சின்னதம்பி மீது அம்மி குழவிக்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டு கொலைசெய்துவிட்டார் மகன் சின்னதுரை என அந்தப் பகுதியினர் அதிர்ச்சி விலகாமல் பேசிவருகின்றனர்.

தஞ்சாவூர்: குடி போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை... தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலைசெய்த மகன்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட போலீஸார் சின்னதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தந்தையைக் கொன்ற சின்னத்துரையைக் கைதுசெய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.