Published:Updated:

குடிபோதையில் தாயைக் கிண்டல் செய்த நபர்; ஓட ஓட செங்கல்லால் அடித்துக் கொன்ற மகன்!

கொலை

ஆந்திராவில் குடிபோதையில் தன்னுடைய தாயைக் கிண்டல் செய்த நபரை மகன் செங்கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சீனு (45 வயது). அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மதுபோதையில் கிண்டல் செய்திருக்கிறார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், இந்தச் சம்பவம் தொடர்பாக தன்னுடைய மகன் பிரசாத்திடம் (23) தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு கோபமடைந்த பிரசாத், சீனுவை ஓட ஓட துரத்திச் சென்று செங்கல்லால் தாக்கி கொலைசெய்திருக்கிறார். மேலும் சீனுவின் உடலை தூக்கிச் சென்று அவர் தாயார் அருகே போட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்திருக்கிறது.

கைது
கைது

இந்த நிலையில் இது தொடர்பாக உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சீனுவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, கொலைசெய்த பிரசாத்தைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.