Published:Updated:

மதுபோதையில் தாயிடம் சண்டைப் போட்ட தந்தை; கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற மகன்! -நாமக்கல் அதிர்ச்சி

க்ரைம் - கொலை

தாயை இழிவாகப் பேசிய தந்தையை மகன் கொலைசெய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுபோதையில் தாயிடம் சண்டைப் போட்ட தந்தை; கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற மகன்! -நாமக்கல் அதிர்ச்சி

தாயை இழிவாகப் பேசிய தந்தையை மகன் கொலைசெய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
க்ரைம் - கொலை

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்துபணை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் தன் கணவர் பழனிசாமியுடன் சேலம் மாவட்டம், எடப்பாடியில் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், கவின் என்ற மகனும் இருக்கின்றனர். பழனிசாமி மதுபோதையில் அடிக்கடி தன் மனைவி மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், மஞ்சுளா தன் கணவரின் கொடுமையைப் பொறுக்கமுடியாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரைப் பிரிந்து ஐந்துபணையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், மனைவி மஞ்சுளாவைப் பார்க்க அவர் கணவர் பழனிசாமி மதுபோதையில் நேற்று இரவு ஐந்துபணை வந்திருக்கிறார். அப்போது மகன் கவினுக்கும், பழனிசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

நாமக்கல்
நாமக்கல்

இதையடுத்து, வாய்த்தகராறு முற்றியதில் கவின் கீழே கிடந்த கல்லை எடுத்து தந்தை பழனிசாமியின் தலை, முகத்தில் பலமாகத் தாக்கியிருக்கிறார். இதில், ரத்த வெள்ளத்தில் தந்தை பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிபாளையம் காவல் நிலைய போலீஸார், உயிரிழந்த பழனிசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி சீனிவாசன் விசாரணை நடத்தினார். கொலைசெய்துவிட்டு தலைமறைவான கவினை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாயை இழிவாகப் பேசிய தந்தையை மகன் கொலைசெய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism