Published:Updated:

``அவர் சாப்பிடாவிட்டால் இவரும் சாப்பிட மாட்டார்!" - தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் தற்கொலை

`மகனுக்கு அவஸ்தை தரக்கூடாது' என்று தாய் தற்கொலை செய்துகொள்ள, 'தாய் இல்லாமல் என்னால் ஒரு நிமிஷம் கூட வாழமுடியாது. தாய் போன இடத்துக்கே நானும் போய்ச் சேருகிறேன்' என்று மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கரூரில் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அமுதவல்லி, ராஜரத்தினம்
அமுதவல்லி, ராஜரத்தினம்
"நான் இனி உங்க மகன்!" - மகனை இழந்த கரூர் பெண்ணைத் தேற்றிய சோமாலிய இளைஞர்  #relationshipgoals

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், 'மகனுக்கு அவஸ்தை தரக்கூடாது' என்று தாய் தற்கொலை செய்துகொள்ள, 'தாய் இல்லாமல் என்னால் ஒரு நிமிடம்கூட வாழமுடியாது. தாய் போன இடத்துக்கே நானும் போய்ச் சேருகிறேன்' என்று மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கரூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமுதவல்லி, ராஜரத்தினம்
அமுதவல்லி, ராஜரத்தினம்

கரூர், வெங்கமேடு காவல் எல்லைக்கு உட்பட்ட புதுக்குளத்துப்பாளையம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அமுதவல்லி (65). அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாகப் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் ராஜரத்தினம் (40). ராஜரத்தினத்துக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். ராஜரத்தினம், மகாலட்சுமி தம்பதிக்கு 12 வயதில் ஸ்ரீநாத் என்ற மகனும் உள்ளார். ராஜரத்தினம் கரூரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

அமுதவல்லி
அமுதவல்லி

ராஜரத்தினம் தனது தாய் அமுதவல்லி மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். தனது தாயை யாராவது விளையாட்டாகக் கூட தப்பாகப் பேசினால், அவர்களிடம் சண்டைக்குப் போய்விடுவாராம். ஆனால், அத்தகைய தாய் மீதான அதீதப் பாசமே, ராஜரத்தினத்தைத் தவறான முடிவை எடுக்க வைத்து, உயிரைவிட வைத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமுதவல்லி எதிர்பாராமல் கீழே தவறி விழுந்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு இடையே நாள்களைக் கடத்தி வந்துள்ளார். தனது தாய் படும் கஷ்டத்தைப் பார்த்து, ராஜரத்தினமும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். இந்நிலையில், `மகனுக்கு அவஸ்தையும், வைத்தியம் பார்க்கப் பணத்தை விரயமும் செய்ய வேண்டாம்' என்ற எண்ணத்தில், அமுதவல்லி நேற்று முன்தினம் விஷமாத்திரைகளை விழுங்கியுள்ளார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் பதறடித்துக்கொண்டு அமுதவல்லியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இதற்கிடையில், தாய் விஷமாத்திரைகளை விழுங்கிய விவரத்தை அறிந்த மகன் ராஜரத்தினமும் விஷம் அருந்தியுள்ளார். நேற்று அவரது தாயார் மிகுந்த கவலைக்கிடமான நிலையில் இருந்து, பின்னர் உயிரிழந்தார். குற்றுயிராகக் கிடந்த ராஜரத்தினத்தை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.

ராஜரத்தினம்
ராஜரத்தினம்

ராஜரத்தினத்தின் உறவினர்கள், "தனது தாய்மீது ராஜரத்தினம் அவ்வளவு பாசம் வைத்திருந்தார். மனைவி, மகன்மீது கூட அவர் அந்த அளவு பாசம் வைக்கவில்லை. தனது தாய் சாப்பிட்டால்தான் சாப்பிடுவார். அவர் விரதம் இருந்தால்கூட, ராஜரத்தினமும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். தனது தாய்க்கு லேசான தலைவலி என்றால்கூட, இவர் துடித்துவிடுவார். இந்நிலையில்தான், சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து அடிப்பட்டு தனது தாய் படும் வேதனையைப் பார்த்து, சோகத்தில் ஆழ்ந்தார் ராஜரத்தினம். இந்நிலையில், அமுதவல்லி அல்லல் பொறுக்கமுடியாமல் விஷமாத்திரைகளை விழுங்கி தற்கொலை பண்ணிக்கிட்டார். அதைப் பார்த்ததும், மனசு பொறுக்காமல் தானும் விஷமருந்தி உயிரைப் போக்கிக்கிட்டார், ராஜரத்தினம். 'மகனுக்கு தொல்லை தரக்கூடாது' என்று தாய் தற்கொலை பண்ணிக்கிட்டார். ஆனால், 'தாய் இல்லாத உலகில் இனி நான் ஒரு நிமிடம்கூட வாழமாட்டேன்' என்று மகனும் தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்துபோயிட்டார். இப்படி இந்தப் பகுதிக்கு தாய், மகன் பாசத்துக்கு எடுத்துக்காட்டாக இரண்டு பேரும் இருந்தாங்க. ஆனா, அவர்களின் தற்கொலை உறவினர்களான எங்களை மட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது" என்று வருத்தப்பட்டார்கள்.