Published:Updated:

``ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 10,000 செல்போன் நம்பர்கள்" - சென்னையில் சிக்கிய திகில் கும்பல்

போலீஸிடம் சிக்கிய திகில்  செல்போன் கும்பல்
போலீஸிடம் சிக்கிய திகில் செல்போன் கும்பல்

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 10,000 செல்போன் நம்பர்களுடன் பெயர், முகவரி என அனைத்து விவரங்களையும் கொடுக்கும் டேட்டா டீம் உள்ளது என்று சென்னையில் கைதான திகில் கும்பல் போலீஸாரிடம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான தனியார் இன்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் படித்துவருகின்றனர். விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்குத் தொடர்ச்சியாக கல்லூரி நிர்வாகத்திலிருந்து போனில் பேசுவதாகக் கூறி அடிக்கடி போன் அழைப்புகள் வந்துள்ளன.

அதில் பேசியவர்கள், கல்லூரியில் கட்டணத்தை உயர்த்திவிட்டோம் உங்கள் மகன் அல்லது மகள் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர். மேலும், கட்டணத்தை வழக்கமாக நீங்கள் செலுத்தும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டாம். புதிய வங்கிக் கணக்கை மெசேஜ் செய்துள்ளோம். அதில் செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

போலீஸார் மீட்ட சொகுசு கார்
போலீஸார் மீட்ட சொகுசு கார்
``3 சிம்கார்டுகள்; ஒரே ஒரு செல்போன்!"- விடிய விடிய பெண் குரலில் பேசிய நெல்லை இன்ஜினீயர்

போனில் வந்த தகவலை உறுதிப்படுத்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டனர். பெற்றோர் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் தலைமைக் காவலர்கள் விஜயன், காமராஜ் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``ராயலா நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள அந்தப் பிரபலமான தனியார் இன்ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அளித்த தகவல்படி கல்லூரி நிர்வாகம் புகாரளித்தது. அதுதொடர்பாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சில போன் உரையாடல்களை ஆதாரமாக எங்களிடம் கொடுத்தனர். அதில், பேசிய தகவல்களின்படி விசாரணையைத் தொடங்கினோம். கல்லூரி நிர்வாகமும் பெற்றோரும் கொடுத்த தகவலின்படி குறிப்பிட்ட செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தோம். அப்போது அந்தச் செல்போன் நம்பர்களை யாரும் கண்டறிய முடியாதளவிற்கு நவீனத் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்த சபீர், சாதிக் ஆகியோர் உறவினர்கள். இவர்கள் இருவரும் ஹோட்டல் பிசினஸ் செய்துவருகின்றனர். இதைத்தவிர கேரளாவில் உள்ள ஒரு அமைப்போடு இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. அதற்காகத்தான் டேட்டாக்களை அதிகளவில் விலைக்கு வாங்கி போனில் பேசிவந்துள்ளனர். 1000 ரூபாய் கொடுத்தால் 10,0000 செல்போன் நம்பர்களைக் கொடுப்பார்கள் என்று கைதானவர்கள் கூறியுள்ளனர்.
போலீஸ்
செந்தில்குமார்
செந்தில்குமார்
`ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜிக்கு ஸ்கெட்ச்!' 
- அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசிய மாணவர்

மேலும் சில செல்போன் நம்பர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இதனால், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடினோம். அவர்கள் அளித்த தகவலின்படி செல்போன் அழைப்புகள் பெங்களூருவிலிருந்து வந்ததைக் கண்டறிந்தோம். இதையடுத்து சென்னையிலிருந்து ஒரு டீம், பெங்களூரு சென்றது. பெங்களூருவில் முகாமிட்ட அந்த டீம் போலீஸாருக்கு கர்நாடக மாநில சைபர் க்ரைம் போலீஸார் பல உதவிகளைச் செய்தனர். செல்போன் நம்பர்கள் குறித்த தகவல்களைக் கேட்ட 5 நிமிடங்களில் அந்த விவரங்களைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். பெங்களூருவில் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு ஏஜென்ட்டான செந்தில்குமார்தான் சிம்கார்டுகளை விநியோகித்தது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில்குமாரைக் கைது செய்தோம். அவர் அளித்த தகவலின்படி சிம்கார்டுகளை வாங்கிய சேக் அகமதுவைப் (28) பிடித்தோம். அவர் ஒரு சிம்கார்டை 250 ரூபாய்க்கு வாங்கி 500 ரூபாய்க்கு விற்றுள்ளார். அதனால், சேக் அகமதுவுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்துவருகிறார். சேக் அகமதுவிடமிருந்து சிம்கார்டுகளை வாங்குபவர்கள், மோசடி வேலைகளுக்கு அதைப் பயன்படுத்திவந்துள்ளனர். சேக் அகமதுவிடமிருந்து கேரளாவைச் சேர்ந்த சாதிக் (42), லத்தீப் ஆகியோர் சிம்கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர்.

சாதிக்
சாதிக்

சாதிக், லத்தீப் மற்றும் இந்தக் கும்பலின் தலைவனான சபீர் (55) ஆகிய மூன்று பேர்தான் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் போனில் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் கல்லூரி நிர்வாகம் கூறுவதுபோல தவறான தகவல்களைத் தெரிவித்து பீதியை ஏற்படுத்திவந்துள்ளனர். கேரளாவிலிருந்தபடியே இந்தக் கும்பல் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளது. தற்போது சபீர் தலைமறைவாக உள்ளார். அவர் சிக்கினால்தான் இந்தக் கும்பலின் நோக்கம் என்னவென்று தெரியவரும். இந்தக் கும்பல் 5 ஆண்டுகளாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து சிம்கார்டுகள், செல்போன், சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

ராயலா நகர் போலீஸார் கைது செய்த செந்தில்குமார், சேக் அகமது ஆகியோரைத் தவிர சாதிக், லத்தீப் ஆகியோர்தான் பெற்றோரிடம் போனில் பேசியுள்ளனர். அதனால் சாதிக், லத்தீப் ஆகியோரிடம் போலீஸார், பெற்றோரின் போன் நம்பர்கள் எப்படி கிடைத்து என்று விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும், டேட்டாக்களை விற்க ஒரு டீம் உள்ளது. அந்த டீமிடமிருந்து வாங்கி சென்னையில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் பேசினோம் என்று கூறியுள்ளனர். பணம் கொடுத்தால் யாருடைய போன் நம்பரும் எங்கள் கைக்கு வந்துவிடும் என்று சாதிக், லத்தீப் ஆகியோர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சேக் அகமது
சேக் அகமது

இதையடுத்து செந்தில்குமார், சேக் அகமது ஆகியோர் யாருக்கெல்லாம் சிம்கார்டுகளை விற்றார்கள் என்ற விவரங்களை பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் போலீஸார் கேட்டுள்ளனர். விரைவில் அந்த சிம்கார்டுகளை பிளாக் செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்தக் கும்பல் குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலை போலீஸார் நம்மிடம் பகிர்ந்தனர்.

``இந்தக் கும்பலைச் சேர்ந்த சபீர், சாதிக் ஆகியோர் உறவினர்கள். இவர்கள் இருவரும் ஹோட்டல் பிசினஸ் செய்துவருகின்றனர். இதைத்தவிர கேரளாவில் உள்ள ஒரு அமைப்போடு இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. அதற்காகத்தான் டேட்டாக்களை அதிகளவில் விலைக்கு வாங்கி போனில் பேசிவந்துள்ளனர். 1000 ரூபாய் கொடுத்தால் 10,0000 செல்போன் நம்பர்களைக் கொடுப்பார்கள் என்று கைதானவர்கள் கூறியுள்ளனர். இந்தக் கும்பலுக்கு டேட்டாக்களை விற்றவர்கள் குறித்தும் விசாரித்துவருகிறோம் இந்தக் கும்பலைச் சேர்ந்த சாதிக், 3-ம் வகுப்பு வரை மட்டும்தான் படித்துள்ளார். ஆனால் அவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் என 7 மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியும். சாதிக்கைப் போல மற்றவர்களுக்கும் 7 மொழிகள் தெரியும். சபீரின் செல்போனில் குரல் மாற்றிப் பேசும் தொழில்நுட்பம் உள்ளது. அதனால் அவர் பெண் குரலில் பேசி பீதியை ஏற்படுத்திவந்துள்ளார்" என்றனர்.

பெண் குரலில் பேசி சென்னை மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பீதியை எதற்காக இந்த திகில் கும்பல் ஏற்படுத்தியது என்று சென்னை போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு