Published:Updated:

1.960 கிலோ தங்கக் கட்டிகள்... இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற மூவர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்

தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

1.960 கிலோ தங்கக் கட்டிகள்... இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற மூவர் கைது!

தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கும் கடல் வழியாகத் தங்கம், வைரம் மற்றும் போதை வஸ்துக்களான கஞ்சா, ஹெராயின் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு இத்தகைய பொருள்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடலில் ரோந்து சென்று வருகின்றனர். மேலும், ஐ.என்.எஸ் பருந்து விமானப்படைத் தளத்திலிருந்து நவீன ரக ஹெலிகாப்டர்கள் மூலம் தமிழ்நாடு கடல் பரப்பு முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கை கடற்படையினரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தங்கம், வைரம் கடத்தப்பட்டு வருவதைக் கண்காணித்து, கடத்தல்காரர்களைக் கைதுசெய்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்  கட்டிகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்

இந்த நிலையில், நேற்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் படகு மூலம் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படை பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களின் படகைச் சோதனை செய்தபோது அதில் 1.960 கிராம் தங்கக் கட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது செய்யப்பட்ட மூன்று பேர்
கைது செய்யப்பட்ட மூன்று பேர்

அதையடுத்து, தங்கம் கடத்திவந்த இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இல்ஷாத் அலி, கிரியக்ஷன்துரன், ஜாப்ரான் ஆகிய 3 பேரைக் கைதுசெய்து, பறிமுதல் செய்த தங்கக் கட்டிகளுடன் யாழ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism